பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருக்குற்றாலக் குறவஞ்சி- ു உரையும்

கொண்டிருக்கும் போது, நீ நின் வாயினால் உரைத்து அவற்றையெல்லாம் காட்டுவது எதற்காகவே? உமது நாட்டின் வளத்தினையும் குற்றாலத்தலத்தின் வளத்தினையும் எனக்கு இனி எடுத்துச் சொல்லுவாயாக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கோட்டுவளம் முலைகாட்டும் கொடியின்வளம்

இடைகாட்டும் குறிஞ்சி பூத்த காட்டுவளம் குழல்காட்டும் மலைவளந்தான்

நீயுரைத்துக் காட்டு வானேன் தோட்டுவளம் புரிகாதல் குற்றால

மலைவளரும் தோகை யேஉன் நாட்டுவளம் எனக்குரைத்துக் குற்றாலத்

தலவளமும் நவிலு வாயே.

10. நாட்டு வளம் கூறுதல் (1) மாமரங்களிலே இருந்து கொண்டு குயில்களாகிய திருச்சின்னங்கள், காமத்துரை வந்தான் வந்தான்’ என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும். பருத்த முலைகளிலே முத்தாரங்கள் கிடந்து புரளும். மின்னல் போன்ற அழகினையுடையவரான பெண்கள், அவரவர்களுடைய அல்குல் தேர்களை அலங்காரம் செய்து கொண்டிருப் பார்கள். மிகப் பெரிய திங்களாகிய வெண்கொற்றக் குடையானது மேலே கவிந்து கொண்டிருக்கும். பறக்கின்ற கிளிகளாகிய குதிரைகள் தேர்களின் முன்னே கொஞ்சிச் சென்று கொண்டிருக்கும். இப்படியாகிய இளந்தென்ற லாகிய தேரினையுடையவனாகக், காமதேவன் வந்து உலாவருகின்ற சிறப்பினையுடையது திருக்குற்றால நாதரின் தென்னாரிய நாடாகும். - இராகம் - கேதாரகெளளம்) (தாளம் - சாப்பு கண்ணிகள் சூர மாங்குயிற் சின்னங்கள் காமத்

துரைவந் தான் துரை வந்தானென்றுத