பக்கம்:திருக்கோலம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஐயம் 91.

அஞ்சி ஓடிவிடுவான். ஆகையால் நீ அவன் வரும்போது வெளிப்படையாக வந்து முன்னே நின்று சேவை சாதிக்க வேண்டும்? என்கிருர்,

கதித்த கப்பு -

வேலே வெம் காலன் என்மேல்

லிடும்போது வெளிநில் கண்டாய். ‘எப்படி நீ தரிசனம் தரவேண்டும் தெரியுமா? உன் காலேயும் கையையும் காட்டிக் கொண்டு நிற்கவேண்டும். உன் திருவடியைக் கண்டு யமன் முன் பட்ட பாட்டை. எண்ணி அஞ்சி ஓடிவிடுவான். உன் கையைக் கண்டு நான் அச்சம் நீங்கி உன் அருள் கிடைத்ததென்று மகிழ் வேன்.: - .

- காலேயும்.கையையும் கொண்டு

வெளி நில்,

அந்தத் திருவடியின் பெருமையைச் சொல்ல வருகிருர். *உன்னுடைய திருவடி அவ்வளவு எளிதில் கண்டுகொள் 'வதற்கு உரியதன்று. மிகப் பெரியவர்களெல்லாம். அந்தத் திருவடியைத் தரிசிக்க வேண்டுமென்று தேடிக்கொண் டிருக்கிருர்கள். திருமால் தேடுகிருன்; பிரமன் தேடுகிருன்;. வேதங்கள் இன்னும் கண்டிலோம் என்று சொல்லித் தேடு கின்றன் ; தேவர்களெல்லாம் தேடுகின்றனர். அவர்களெல் லாம் தேடியும் காண முடியாமல் நின்ற திருவடி உன் பாதாம்புயம். ஆலுைம் பக்தர்களுக்கு எளியது அது. ஆதலால் நான் வேண்டிக் கொள்கிறேன். என் ஆபத்தைப் போக்க அந்தத் திருவடியைக் காலனும் நானும் காணும்படி வந்து நிற்கவேண்டும்.” - -

மால் அயன் தேட மறை தேட

வானவர் தேட நின்ற காலேயும்....கொண்டு

வெளிதில் கண்டாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/101&oldid=578040" இலிருந்து மீள்விக்கப்பட்டது