பக்கம்:திருக்கோலம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலம் 96.

அந்த ஞானமூர்த்தியை ஒன்றும் செய்ய முடியாது’ என்றன். நயத்தாலும் பயத்தாலும் அவனே வழிக்குக் கொண்டு வந்தார்கள் அமரர்கள்.

மன்மதன் போன்ை. அம்பு விட்டான். என்ன ஆயிற்று? இறைவன் தன் நெற்றிக் கண்ணேத் திறந்து பார்த்தான். மன்மதன் பொடிசாம்பலாகி விட்டான். முதலுக்கே மோசம் வந்து விட்டது. இரதிதேவி வந்து அழுதாள். பார்வதி கல்யாணத்தின்போது வா; உனக்கு அருள் புரிகிறேன்’ என்று திருவாய் மலர்ந்தருளினுன் இறைவன். மன்மதன் இறந்து கிடந்தான்.

தேவர்கள் பிறகு இறைவனிடம் - நேரே விண்ணப்பம் செய்து கொண்டார்கள். அவன் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளுவதாகத் திருவாய் மலர்ந்தருளினன். மன்மதன் இல்லாத காலத்தில்தான் பார்வதி பரமசிவ. னுடைய திருமணம் நடைபெற்றது. உலகில் மன்மதன் அம்பைப் பிரயோகம் செய்ய, அதல்ை காமமும் கல்யாண மும் நிகழ்கின்றன. இங்கே பரமேசுவரனுடைய திருமணம் காமத்தின் நிழலே படாத திருமணம்

காமம் அகற்றிய தூயனடி-சிவ காம சுந்தரி நேயனடி’’

என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிறர். இறைவன் காமத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லே. உலக மெல்லாம் ஆண் பெண் உறவை ஏற்று வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டான்.

அவன் எத்தனையோ காலம் மெளனமாக யோகத்தில் வீற்றிருந்தான். அந்தப் பெருமானத் திருமணம் செய்து கொள்ளும்படி அம்பிகை செய்தாள்.

எல்லோரும் யோகம் செய்யும்போது தம்முடைய உபாசஞ்) தெய்வத்தைத் தியானம் பண்ணுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/106&oldid=578045" இலிருந்து மீள்விக்கப்பட்டது