பக்கம்:திருக்கோலம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலம்

அம்பிகையைத் தியானம் செய்கிறவர்கள் பிறவித் துன்பத்தை அடையமாட்டார்கள் என்று சொல்லிய அபிராமிபட்டர், யமவாதனையும் அவர்களுக்கு இராது என்பதைச் சொல்ல வருகிருர், முன்பாட்டில் படர்க்கையாக வைத்துச் செய்தியைச் சொன்னவர், இப்போது தம்முடைய அநுபவத்தைச் சொல்கிருர். அம்பிகையை இப்போது அர்த்தேசுவர நாரியாக, இறைவனே ஒரு பாகத்தில் வைத் திருக்கும் அன்னையாகக் கண்டு துதிக்கிருர். பரமேசுவர னுடைய திருமேனியில் ஒரு பாகத்தை அவள் விரும்பிப் பறித்துக்கொண்டாளாம். அந்தக் கோலத்தையே இப்போது நினைக்கிருர், . . . -

பரமேசுவரனுடைய அடையாள மாலே கொன்றை. அதை அவன் தலையிலும் மார்பிலும் அணிந்திருக்கிருன். பொதுவாகத் தேவலோகத்து மலர்களில் வண்டு மொய்ப்ப தில்லை. ஆயினும் இறைவன் கருணை கொண்டு தான் அணிந்த கொன்றை மலரில் வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணும்படி செய்திருக்கிருன்.

'சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை?? என்று இந்தக் கருணையை மணிவாசகரும் எடுத்துச் சொல் வார்.

வண்டுகள் கொன்றை மலரைக் கிண்டுகின்றன. அதிலுள்ள வாசனை மிக்க தேன் கட்டவிழ்ந்து ஒழுகு,

தி-1 . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/11&oldid=577950" இலிருந்து மீள்விக்கப்பட்டது