பக்கம்:திருக்கோலம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருக்கோலம்

வெளி நின்றது-புறக்கண்ணிலும் தரிசிக்கும்படியாக வெளி யில் நிலவியது. விரதத்தைப் பழித்தலாவது, இவர் தவம் இருந்து என்ன பயன்? அதை அம்பிகை கலத்து. விட்டாளே!’ என்று இகழ்ந்து கூறுதல், பாகம்-பாதி, ஆளும்-தன் விருப்பப்படி ஆட்சி புரியும்.)

இதற்குமுன் 65-ஆம் பாடலில், அம்பிகை இறைவ. னுடைய மனத்தை மாற்றித் தன் வயப்படும்படி செய்ததை. வேறு ஒரு வகையில் சொன்னர். இங்கே அப்பாடல் ஒப்பு நோக்குவதற்குரியது.

'ககனமும் வானும் புவனமும்

காணவிற் காமன்.அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு

மாற்குத் தடக்கையும்செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத்

தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன் ருேவல்லி நீசெய்த வல்லபமே!’

அம்பிகையின் ஆற்றலுக்கு அடங்காதவர் யாரும் இல்லே என்பதும், பெருங் கருணையால் அன்பர்களுக்கு அவள் காட்சி தருவாள் என்பதும் இப்போது பார்த்த, பாடலின் உள்ளுறை. -

இது அபிராமி அந்தாதியின் 87-ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/112&oldid=578051" இலிருந்து மீள்விக்கப்பட்டது