பக்கம்:திருக்கோலம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多 திருக்கோலம்

கிறது. அத்தகைய கொன்றையை எம்பெருமான் தன் சடாபாரத்தில் அணிந்திருக்கிருன்.

வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான்.

கொன்றை மலர் பொன் நிறம் உடையது. 'தாரமர் கொன்றையும்...சாத்தும் தில் லேயூரர்’ (காப்பு) என்றும், 'கொன்றை வார்சடைமேல், பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும்' (4) என்றும், கொன்றை வார்சடையின் மேலினும்’ (0ே) என்றும், 'குழையத் தழுவிய கொன்றையந் தார் கமழ்’ (100) என்றும் இறைவன் கொன்றையை அணிந்திருப்பதைப் பல இடங் களில் எடுத்தாளுவார். கொன்றைமலர் ஓங்காரம் போன்ற வடிவுடையது. ஆதலின் அதனைப் பிரணவ புஷ்பம் என்று கூறுவா.

சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பாகத்தை அம்பிகை பறித்துக் கொண்டாள் என்று சொல்கிறர். ஓர் அரசன் மற்ருெர் அரசைேடு பொருது வெற்றி பெற்றல் அவன் தோல்வியுற்ற அரசனுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்வது வழக்கம். அதுபோல, தேவி தன் எழிலால் இறைவனே வென்று தோல்வியுறச் செய்தாள். அந்த வெற்றிக்கு அறிகுறியாக அவனுடைய வாமபாகத் தைத் தனக்கு உரியதாக வலிந்து பெற்றுக் கொண்டாள்.

துணைஇரதி

பதிசயமானது அப்சயமாகமுன்

பார்த்தவர்தம் மதிசய மாகஅன் ருேவாம பாக்த்தை

வவ்வியதே?? (17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/12&oldid=577951" இலிருந்து மீள்விக்கப்பட்டது