பக்கம்:திருக்கோலம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருக்கோலம்

கிருர். அவர் உரிமையோடுஅந்தவேண்டு கோளே விடுக்கிருர். இன்ஷ்யூரன்ஸ் செய்தவன் அவ்வக்காலத்தில் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினுல் உரிய காலத்தில் பெருந்தொகை கிடைப்பதுபோல, அபிராமி பட்டருக்கு அம்பிகையின் அருள் கிடைக்கும்; அதற்காகப் பல கால்: மாகச் செய்யவேண்டியவறறைச் செய்து வாழ்ந்தவர்; அந்த உரிமை பற்றி இந்த வேண்டுகோ8ள விடுக்கிருர்,

உடம்பிலிருந்து உயிர் பிரிவதுதான் மரணம். உடம் புக்கும் உயிருக்கும் உள்ள உறவு நிலையானதன்று. முட்டை யிலிருந்து பறவைக்குஞ்கு வெளி வந்து பறந்து ஒடிப்போவது போல இந்த உடம்பிலிருந்து உயிர் பிரிந்துவிடும்: * குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே - உடம்போ டுயிரிடை நட்பு ‘. . . என்று திருவள்ளுவர் சொல்கிருர்.

அவ்வாறு மரணம் , சம்பவிப்பதற்குமுன் நம்முடைய பொறிகள் ஒவ்வொன்ருக அடங்கிவிடும். அறிவும் மயங்கிப் போகும். கண் பஞ்சடையும்; காது கேளாது; நாவிற்குச் சுவைதெரியாது; எறும்பு கடித்த லும் சுரனே இருக்காது; நம் துர்நாற்றம் நமக்குத் தெரியாது. - - –

‘புலனேந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஜம்மேல் உந்தி அலமந்த பொழுதாக?? - என்று அந்த நிலையைத் திருஞானசம்பந்தப் பெருமான் விடுகிறர் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு அற்றுப் போக, அறிவு மயங்கி மறக்கும் சமயந்தான் மரண நிலை. அந்தச் சமயத்தில் நீ எழுந்தருளி வந்து நலம் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகிருர் ஆசிரியர்.

உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்பொழுது என்முன்னே வரல்வேண்டும் என்பது அவர் வேண்டுகோள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/124&oldid=578063" இலிருந்து மீள்விக்கப்பட்டது