பக்கம்:திருக்கோலம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரியம் அற்ற உறக்கம் ' 119.

சிறக்கும் கமலத் திருவே, நின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும்

நீயும் துரியம்அற்ற உறக்கம் தரவந்து உடம்போடு

உயிர்உறவு அற்றுஅறிவு மறக்கும் பொழுதுஎன்முன் னேவரல்

வேண்டும் வருந்தியுமே.

(அந்வயம்: சிறக்கும் கமலத்திருவே, உடம்போடு உயிர் உறவு அற்றுஅறிவு மறக்கும்பொழுது, நின் சேவடி சென்னி வைக்க, துரியம் அற்ற உறக்கம் தர, துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் வருந்தியுமே என் முன்னே வரல் வேண்டும். x

சிறப்புள்ள ஆதார கமலங்களில் எழுந்தருளியிருக்கும் தேவி, அடியேனுக்கு (மரணுவஸ்தை உண்டாகி) உடம் போடு உயிருக்குள்ள உறவு அற்றுப்போய், அறிவு எல்லா வற்றையும் மறந்து மயங்கும் சமயத்தில், நின்னுடைய சிவப்பான திருவடியை அடியேனுடைய தலையில் வைத் தருளவும், துரியம் கடந்த உறக்க நிலையாகிய பேரானந்த அநுபவத்தைத் தந்தருளவும், மோட்சத்தைத் தருபவ ராகிய நின்னுடைய கணவராகிய சிவபெருமானும் நீயும், என்னிடம் வருவது வருத்தம் தருவதாக இருந்தாலும் அந்த வருத்தத்தை மேற்கொண்டேனும் அடியேன் முன்னே எழுந்தருளிக் காட்சி கொடுக்கவேண்டும். .

நின் சேவடியைச் சென்னியிலே வைத்து வழிபட, அத்தகையவர்களுக்கு மோட்சத்தைத் தரும்’ என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். துறக்கம் தரும் என்பது நின் என்பதற்குரிய அடை, திருவே என்ருர், மகாலகஷ்மி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/129&oldid=578068" இலிருந்து மீள்விக்கப்பட்டது