பக்கம்:திருக்கோலம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருக்கோலம்

பணத்தால் எல்லாவற்றையும் பெற்று விடலாம் என்பது உண்மையாகாது.

வேண்டியவற்றை யெல்லாம் மனிதன் பெற்றுவிட முடியும் என்றல், உலகில் மனக்குறை உள்ளவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ஆனல் உலகில் மனிதர்கள் எல்லோருமே குறை உடையவர்களாகத்தான் இருக் கிருர்கள். செல்வம் இருக்கும்; கல்வி இராது. கல்வி இருக்கும்; தேக ஆரோக்கியம் இராது. ஆகவே நம் முடைய குறை நீரவேண்டுமானுல் குறையுடைய மனிதரால் தீராது. : -

குறைவிலா நிறைவாகிய அம்பிகை ஒருத்திதான் எது கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும், எப்போது கேட் டாலும் வழங்கும் ஆற்றலும் கருணையும் உடையவள். அவள் மனத்தில் வந்து குடிபுகுந்த பிறகு என்ன குறை வரப் போகிறது? எது வேண்டுமானலும் கேட்பதற்கு முன்னே மனமறிந்து தந்துவிடுவாள். வேண்ட வேண்டிய அவசியமே இல்லை. அவளே நமக்கு இது வேண்டும் என்று உணர்ந்து வழங்குவாள். . , .

வேண்டத் தக்கது அறிவோய் நீ??

என்று திருவாசகம் சொல்கிறது அல்லவா? .

ஆகவே, அம்பிகை என் உள்ளத்தாமரையில் வந்து ...! குடிபுகுந்து விட்டாள். அதல்ை எனக்கு வேண்டிய பொருள் எதுவாலுைம் கிடைக்கும்; எனக்கு வந்து சேராத பொருள் யாதும் இல்லை என்று மனநின்றவோடு பேசுகிருர், இவ்வன்பர். . . . -

இனி எனக்குப் -

- பொருந்தா தொருபொருள் இல்லை.

சங்கநிதி, புதுடிநிதி, கற்பகம், காமதேனு, சிந்தாமணி என்பனவற்றையெல்லாம் தன் இல்லத்தில் வைத்திருப்பவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/136&oldid=578075" இலிருந்து மீள்விக்கப்பட்டது