பக்கம்:திருக்கோலம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- குறைவிலா நிறைவு 127

னுக்கு எந்தப் பொருள் தான் கிடைக்காது? அவைகூட முத்தியின்பத்தைத் தரமுடியாது. அம்பிகை அந்தப் பொருள்களைவிட மேலானவள். அவள் முத்தியின்பத்தை யும் தருபவள். அவள் உள்ளத்தில் வீற்றிருக்கும்போது கிடைக்காத பொருளும் உண்டோ?

வருந்தா வகை என் மனத்தா

மரையினில் வந்துபுகுந்து இருந்தாள் பழைய இருப்பிட

மாக; இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லை;விண்.

மேவும் புலவருக்கு . . . . . விருந்தாக வேலே மருந்தா

னதைநல்கும் மெல்லியலே! (வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய கோமளே யாகிய அபிராமி, அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து, அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி விற்றிருந்தாள். இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை. .

வருந்தாவகை-அடியேன் ஜனன மரணங்களில் வருந்தாதபடி என்றும் சொல்லலாம். இனி-இனிமேல். பொருந்தாதது ஒரு பொருள் என்பது பொருந்தாதொரு பொருள் என வந்தது; தொகுத்தல் விகாரம். புலவர். தேவர். விருந்து-புதுமையும் ஆம். வேல:கடல்; இங்கே 'யாற்க்டல். மருந்து-அமுதம். மெல்லியல்-மெல்லிய" so இயல்புடையவள்; கோமலாங்கி,கோமலாகாரா என்பவ்ை அம்பிகையின் திருநாமங்கள்.) - o ல் 'அம்பிகையைத் தியானம் பண்ணியதால் குறைவிலா

திறைவு உண்டாயிற்று என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 90ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/137&oldid=578076" இலிருந்து மீள்விக்கப்பட்டது