பக்கம்:திருக்கோலம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருக்கோலம்

பதத்தே உருகி நின் பாதத்திலே

மனம் பற்றி.

இப்போது அபிராமிபட்டர் மனம் எம்பெருமாட்டியின் பாதத்தைப் பற்றிக்கொண்டது. நாம் செய்யும் செயல் களெல்லாம் நம் மனம் நினைத்தபடி நடப்பவை. மனம் நினைத்துச் செயலாக்க முற்படுகிறது. மனிதன் மனத்தின் வழி வாழ்கிறன். அன்பருடைய மனம் அபிராமியம்மையின் திருவடிகளைப் பற்றிக்கொண்டது; இனி விடாது.

தத்தித் தத்தி நடக்கத் தெரியாமல் திண்டாடும் குழந்தையை அதன் போக்கிலே விட்டுவிட்டால் அது கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ளும்; எது மேடு, எது பள்ளம் என்து தெரியாமல் சென்று துன்புறும், தாய் அதை எடுத்து இடுப்பில் வைத்துக்கொன்கிருள். ஆதன் பின்பு அந்தக் குழந்தை ஆபத்தில் அகப்பட்டுக்கொள்ளாது. அன்னே போகும் போக்கே அதன் போக்காக இருக்கும்; அதற் கென்று தனிப்போக்கு இராது. r

அன்பர் மனம் அம்பிகையின் திருவடியைப் பற்றிக் கொண்ட பிறகு அதன் நினவெல்லாம் அம்பிகையின் அருள் நெறியிலே படரும். அவளுக்கு இதமானவை எவையோ அவற்றையே நினைக்கும்; அந்த நினேவின் வழியே செயல்கள் உருவாகும். மனத்தின் வழியே ஒழுக்கம் அமைவதால் இனி மேல் அன்பருடைய ஒழுக்கம் பராம்பிகை காட்டும் வழியிலே அமையும். அவளுக்கு இதமான வழியிலே ஒழுகு வார். அம்பிகையின் அடியைப் பற்றிக்கொண்ட பிறகு அன்பர் அவள் வசத்தவர் ஆகிவிடுவார். தமக்கென்று ஒரு செயல் இராது. எல்லாம் அவள் நடத்துவனவாக அமையும். அடியைப் பற்றிக்கொண்ட அன்பரை அன்னே அடிமை கொண்டபிறகு அவருடைய செயல் முழுவதும் அம்பிகையின் அருள் எல்லேக்குள்ளே, அவள் திருவுள்ளத்துக்கு உவப் யானவையாகவே அமையும். இந்த அநுபவத்தையும் சொல்கிருர். . : « . » -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/148&oldid=578087" இலிருந்து மீள்விக்கப்பட்டது