பக்கம்:திருக்கோலம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரண்பாடுகள்

பெண்களுக்குப் பருவந்தோறும் தோற்றத்தில் மாறு பாடு இருக்கும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரினம்பெண் என்று மாதர்களுக்கு ஏழு பருவங்கனேச் சொல்வார்கள். உலா என்ற நூலில் இந்த ஏழு பருவப் பெண்களின் வருணனேகளும் வரும், பேதைப் பெண்ணின் கண் பார்வையில் அவளுடைய பேதைமை புலகுைம். மங்கைப் பருவப் பெண்ணின் கண்ணில் மதர்ப்பு ஒன்று இருக்கும். பெண்களுடைய மார்பில் நகில் வளர்ச்சியும் தள ர்ச்சியும் பருவத்துக்கு ஏற்ற படி அமையும். மங்கைப் பருவப் பெண்களின் வருணனை யையும் பேரிளம் பெண்களின் வருணனையையும் பார்த்தால்

முன்னவர்களின் கிளர்ச்சியும் பின்னவர்களின் தளர்ச்சியும். தெரியவரும். மக்களைப் பயந்த பெண்மணிகளின் உறுப் புக்கள் தளர்ச்சி பெறும், கருப்பத்தால் மங்கையருக்க கழகு குன்றும்’ என்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பல மக்களைப் பெற்ற பெண்மணிகள் பல வகையில் தளர்ச்சி அடைவார்கள். அந்தத் த ள ர் அவர்களுடைய மார்பிலும் கண்களிலும் தெளிவாகத் தெரியும். இவை உலகில் உள்ள மாதர்களுக்கு இயல்பு. தெய்வமங்கைய ருக்கு இந்தத் தளர்ச்சி உண்டாவதில்லை.

தெய்வ மங்கையர்களுக்குள் நாயகியாக விளங்கு கிறவள் அம்பிகை. அந்தப் பெருமாட்டியின் லாவண்யம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/152&oldid=578091" இலிருந்து மீள்விக்கப்பட்டது