பக்கம்:திருக்கோலம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரண்பாடுகள் .145

இவை போகட்டும். அம்பிகை ஈறும் முதலும் இல்லா தவள். தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்காேயே பிறவி யென்னும் கடலேக் கடக்கும்படி செய்கிறவள். அவளுக்கு முடிவு இல்லை; அப்படியே பிறவியும் இல்லே.

முடிவு இல்; அந்த வகையே பிறவியும்.

யாருக்குத் தோற்றம் உண்டோ, அவருக்கு முடிவும் உண்டு. தோற்றினவர்கள் யாரும் அழிந்து போவார்கள். என்றும் அழியாமல் ஒருவர் இருப்பவர் என்ருல் அவர் தோற்றம் இல்லாதவராகத்தான் இருக்கவேண்டும்; அந்ாதி யாகவே இருப்பார். அம்பிகைக்கு இறுதி உண்டா? அவள் நித்தியமாக உள்ளவள்; அழிவற்றவள். ஆகவே அவளுக்குப் பிறவி இருக்க நியாயம் இல்லை. முடிவு இல்லை என்ருல் அந்த நியாயப்படியே பிறவியும் இல்லை என்று உறுதி யாகச் சொல்லிவிடலாம்.

ஆல்ை ஒரு வேடிக்கை பாருங்கள்; அம்பிகை பிறந் தாளாம்! முடிவில்லாதவள் எப்படிப் பிறக்க முடியும்? மலே யரசன் மகளாகப் பிறந்தாள் என்று சொல்கிருர்களே! அது வம்பு அல்லவா? நாம் அடிக்கடி மலேமகள், பார்வதி என்று சொல்கிருேம். நாம் மட்டுமா சொல்கிருேம்? லலிதா சகசிர நாமமே அவளை அஜா (866) (பிறக்காதவள்) என்று சொல்லிவிட்டு, பார்வதி (246) என்றும், சைலேந்த்ர தநயா (634) என்றும் சொல்கிறதே! இது வம்பல்லவா?

வம்பே, மலேமகள் என்பது நாம்,

சர்வப் பிரபஞ்சத்தையும் ஈன்றவள் அம்பிகை என்பது சத்தியமானது. ஆனல் அவள் பலரைப் பெற்ற ஒரு தாய்க் குரிய தளர்ச்சியை அடையாதவள் என்பது முரண்கத் தோன்றுகிறது; நகைப்புக்கு இடமாகத் தெரிகிறது. இந்த முரண்பாடே அவளுடைய தெய்வத் தன்மையைக் காட்டுகிறது. ,, . . . . . . . . . . -

தி-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/155&oldid=578094" இலிருந்து மீள்விக்கப்பட்டது