பக்கம்:திருக்கோலம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரண்பாடுகள் *147

தன்னை விரும்பும் அன்பர்களின் மனத்திலே வடிவம் காட்டும்பொருட்டு அவள் கொள்ளும் கோலங்கள் உலகிய லோடு ஒத்துவராதவை; அப்பிராகிருத மானவை. அவளு டைய திருவிளையாடல்களும் அப்படியே மாறுபாடு உடை யனவாக இருக்கலாம். அவற்றின் பொருத்தத்தை ஆராய நமக்கு ஆற்றல் இல்லே. இவ்வாறே, அவளுடைய தகை மைகள், இயல்புகள் இன்னவை என்று கணக்கிட்டுக் காரண காரியத் தொடர்பும் பொருத்தமும் காட்ட முடியாதவை. ‘அசிந்த்ய ரூபா (354) என்பதும், அளவிடற்கரியவள் என்ற பொருளில் அப்ரமேய (413) என்பதும், 'அவ்யக்தா (898) என்பதும் லலிதா சகசிரநாமம் கூறும் திருநாமங்கள். அவள் இயல்புகள் நம் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டவை என்பதை அவை அறிவுறுத்துகின்றன.

முதலில், இது வேடிக்கையாக இருக்கிறது என்று தொடங்கிய அபிராமிபட்டர், இறுதியில், அடே அப்பா! இவற்றையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருப்பது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது. அந்த ஆராய்ச்சி அதிகப் பிரசங்கித்தனம்; மிகை’ என்று முடிக்கிருர்.

நகையே இஃது; இந்த ஞாலம்எல்

லாம்பெற்ற நாயகிக்கு n முகையே முகிழ்முலே; மானே.

முதுகண் முடிவுஇல்;அந்த வகையே பிறவியும்; வம்பே - மலேமகள் என்பது நாம்; மிகையே இவள்தன் தகைமையை

நாடி விரும்புவதே. (இந்த உலகங்களை எல்லாம் ஈன்றருளிய பரமேசுவரிக்கு அரும்பிய நகில் தாமரை அரும்பு; அருளால் நிரம்பி முதிர்ந்த கண் மருட்சியைப் பெற்ற மான் கண், இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/157&oldid=578096" இலிருந்து மீள்விக்கப்பட்டது