பக்கம்:திருக்கோலம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் அநுபவம் 158

இயங்காமல் நிற்க, தேனையுண்ட வண்டுபோலச் செயலற்று நிற்கும் நிலை உண்டாகும். -

தம்மை மறந்த நிலையினின்றும் சற்றே தெளிவு பெற்றுக் கீழே இறங்கும் போது ஒரு வகையான தடுமாற்றம் ஏற்படும். துயிலிலிருந்து எழுப்பப்பட்டவன் எழும்போது எப்படித் தடுமாறுவானே அது போன்ற தடுமாற்றம் அது. அவர்களுடைய கண்ணிலே ஒரு மதர்ப்பு, அவர்களுடைய சொற்களிலே ஒரு தழுதழுப்பு, அவர்களுடைய நடையிலே ஒரு தயக்கம் அமையும். . .

மொழி தழுதழுத்திட வணங்கும், சன்மார்க்க நெறி’ என்று தாயுமானவர் பாடுவார், -

ஆனந்த மயக்கத்தினின்றும் தெளிந்து இறங்கும் அடியார்க்கு மொழி தடுமாறி வருமாம்.

மொழி தடுமாறி,

இப்படி உள்ள பக்தர்கள் அம்பிகையின் அருளிலே குளித்தவர்கள். அவர்கள் பேச்செல்லாம் வெறும் பேச்சாக இராது. அவர்கள் வாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். அவர்கள் பித்தரைப்போல இருப்பார்கள்; பேசுவார்கள். இறைவியின் அருளின்பக் கள்ளை உண்ட பித்தர்கள் அவர்கள் மொழி தடுமாறிப் பேசிலுைம் அவர்கள் சொன்ன தெல்லாம் நிகழும்; பலிக்கும். சொன்னவற்றையெல்லாம் பிரத்தியட்சமாகத் தரும் பித்து, அவர்கள் கொண்ட பித்து. . . .

மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்

தரும் பித்தர். . - அபிராமியிடம் அன்பு பூண்டு மேலும் மேலும் அதை வளர்க்கும் அடியார்கள் அதன் பயனுக ஆனந்த அநுபவம் பெற்று எல்லாம் மறந்து நிற்பர்; சொன்ன வெல்லாம் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/163&oldid=578102" இலிருந்து மீள்விக்கப்பட்டது