பக்கம்:திருக்கோலம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது കുഖ്?

யான், எனது என்ற இரண்டையும் அகப்பற்று புறப்பற்று என்று சொல்வார்கள். இவைகளே அகங்கார மமகாரங்கள். என்னுடையது என்று ஒன்றின்மேல் பற்று வைத்தால் அது சம்பந்தமான சுகதுக்கங்கள் நம்மையும் சாரும். ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. அவர் அந்தக் குழந்தையினிடத்தில், 'என் குழந்தை” என்று அபிமானம் கொண்டு வளர்த்து வருகிருர். அந்தக் குழந்தை குதித்து விகளயாடிச் சிரித்தால் அவர் மகிழ்ச்சி அடைகிருர், அதற்கு நோய் வந்து விட்டால் அவர் துயரப்படுகிறர். அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்பு அதல்ை வரும் இன்ப துன்பங்கள் அவருக்கு இல்லை. குழந்தை வளர்ந்து பெரிய வகிைருன். அவன் சரியாகப் படிக்காவிட்டால் அவருக்குக் கவலே உண்டாகிறது. அவன் சொல்லிக்கொள்ளாமல் எங் காவது போய்விட்டால் அவன் திரும்பி வருகிற வரைக்கும் அவருக்கு நெஞ்சு பக் பக்கென்று அடித்துக்கொள்கிறது.

இப்படியே மனைவி, சுற்றத்தார், நண்பர் முதலியவர் களிடம் உறவு வைத்து ஒட்டி வாழும்போது அவர்களால் நமக்கு வரும் சுகதுக்கங்கள் பெருகி விடுகின்றன. சுகத்தைக் காட்டிலும் துக்கமே அதிகமாக இருக்கிறது.

மனிதர்கள் கிடக்கட்டும். மாடு கன்று வளர்த்து வரு கிறோம். மாடு இளைத்துப்போல்ை அதற்காக வருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/166&oldid=578105" இலிருந்து மீள்விக்கப்பட்டது