பக்கம்:திருக்கோலம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது கவலை? of 57.

கிருேம். அது சரியாகப் பால் கொடுக்காவிட்டால் நமக்குக் கவலே உண்டாகிறது. நாய், பூனை ஆகியவைகளே வளர்க்கிற வர்களும் அப்படித்தான் பல சமயங்களில் கவலேப்படு. கிருர்கள்.

மனிதர்கள், மாடு எல்லாம் ஜிவப்பிராணிகள், ஜடமாக உள்ள வீடு, நிலம், தங்கம் முதலியவற்றை நாம் வைத்து ஆள்கிருேம். வீடு ஒழுகுகிறது. அதுபற்றி அதற்குக் கவலே. இல்லே. நாம் ஒட்டையாகி விட்டோமே! இந்த ஒட்டையை யார் அடைக்கப் போகிருர்கள்?’ என்று வீடு கவலேப்படுவ துண்டா? அதுதான் ஜடமாயிற்றே! ஆல்ை நாம் அதற். காகக் கவலைப்படுகிருேம். எப்போது இதைச் செப்பம் செய்வது? அதற்குரிய பணம் வேண்டுமே!’ என்று கவலைப் படுகிருேம். நிலம் இருந்தால் அதற்குச் சரியானபடி நீர்ப் பாசனம் அமைய வேண்டுமே, மழை பெய்ய வேண்டுமே, உரம்போட வேண்டுமே, நன்ருக விளைய வேண்டுமே என்று கவலேப்படுகிருேம்.

பணம் இருந்தால் கவலே போகுமே என்று எண்ண லாம். மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம் என்று சொல்வார்கள். நம்முடைய பணத்தை யாராவது அடித்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் உண்டாகிறது. செலவு செய்தால் பணம் குறைந்து விடுகிறதே என்ற அங்கலாய்ப்பு உண்டாகிறது. இப்படிப் பார்த்துக் கொண்டே போனல், எதை எதை நம்முடையதென்று அபிமானம் வைத்துப் பற்றிக் கொள்கிருேமோ, அந்த அந்தப் பொருளில்ை நமக்கு அதிகப் பொறுப்பும், அது காரணமாக அதிகத் தொல்லைகளும் உண்டாகின்றன என்று தெரியவரும். எதையும் பற்ருமல் இருந்தால் அத்தகைய தொல்லைகள் இல்லே,

யோதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்?

என்று திருவள்ளுவர் சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/167&oldid=578106" இலிருந்து மீள்விக்கப்பட்டது