பக்கம்:திருக்கோலம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலம் 7

குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்,

லாம்நின் குறிப்பு:அறிந்து

மறித்தேன் மறலி வருகின்ற

நேர்வழி; வண்டுகிண்டி * - -

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில் -

பறித்தே குடிபுகு தும்பஞ்ச §

பாண பயிரவியே.

(வண்டுகள் கோதியதனுல் மணம் பொருந்திய தேன் கட்டவிழ்ந்து ஒழுகுகின்ற கொன்றை மலரை அணிந்த சடாபாரத்தை உடைய சிவபெருமானுடைய திருமேனி யில் ஒரு பாதியை, அவரை அழகால் வென்று கவர்ந்து, அங்கே குடிபுகுந்த, ஐந்து மலரம்புகளேயுடைய பயிரவியே, அடியேன் மனத்தில் நின் திருக்கோலம் முழுவதும் தியானம் செய்தேன். அதன் பயனுக நின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து. யமன் என் உயிரைப் பறிக்க வருகிற நுணுகிய வழியைத் தடுத்தேன்,

குறித்தல்-தியானித்தல்; குறியைக் குறியாது குறித் தறியும் நெறி' என்பது கந்தர்அனுபூதி. மறித்தேன்-தடுத் தேன். மறலி-யமன். நேர்தல்-நுணுகுதல்; நேர்வழி-மிகவும் நுட்பமாக அமைந்த வழி. கிண்டி-கிண்ட, எச்சத் திரிபு. வெறி-நறுமணம்.)

இந்தப் பாட்டில் குறித்துள்ள கோலம், அம்பிகையின் தனிக்கோலம் என்றும் கொள்ளலாம்; அல்லது பிற்பகுதி யில் சொன்ன அர்த்தநாரீசத் திருக்கோலம் என்றும் கொள்ளலாம். யமவாதனையைப் போக்க, அந்தத் திருக் கோலத் தியானம் பயன்படும் என்பதை முன்னே ஒரு பாட்டில் புலப்படுத்தி யிருக்கிருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/17&oldid=577956" இலிருந்து மீள்விக்கப்பட்டது