பக்கம்:திருக்கோலம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருக்கோலம்

அவ்வண்ணமே பூரீ மாதாவாகிய அம்பிகையிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு அவளுடைய கருணத்தோணியில் ஏறி அமர்ந்துவிட்டால் நாம் பிறவிக் கடலேயே கடந்துவிடலாம்.

தரையில்ே நடக்கிற குழந்தைதான் மேடு பள்ளம் பார்த்து நடக்க வேண்டும்; கல், முள் குத்துமே என்று கவனத்துடனும் கவலேயுடனும் நடக்கவேண்டும். நெடுந் துரமானுல் நடக்க முடியாமல் கால் வலிக்கும். தாயின் இடுப்பில் ஏறிக்கொண்ட குழந்தைக்கு இந்தத் தொல்லேகள் இல்லே. எல்லாவற்றையும் அன்னே பார்த்துக் கொள்வாள். அந்தக் குழந்தை தாயின் இடையிலே அமர்ந்து விடும் முயற்சியைச் செய்ய வேண்டும். அமர்ந்து விட்டால் வழியைப் பற்றியோ தூரத்தைப் பற்றியோ கவலேப்பட வேண்டிய அவசியம் இல்லே, . . . . .

இவ்வாறு, தமக்குள்ள எல்லாவற்றையும் அம்பிகைக் குச் சமர்ப்பணம் செய்தவர் அபிராமிபட்டர். அவருக்கு இப்போது பொறுப்பே இல்லே. நல்லதாலுைம் கெட்ட தானுலும் அவர் கவலேப்படுவதில்லை. அவர்தாம் தாயின் இடுப்பில் ஏறிக்கொண்ட குழந்தை ஆயிற்றே! அபிராமி யம்மையின் கருணைத் தோணியில் ஏறிக்கொண்டவர் அல்லவா? அவருக்கு இருந்த பொறுப்பை எல்லாம், பாரத்தை எல்லாம், அம்பிகை ஏற்றுக்கொண்டு விட்டாள். யோககேஷமம் வஹாம்யஹம்’ என்று பகவான் கீதையில் சொன்னபடி, அம்பிகை அவருடைய சுகதுக்கங்கஆள ஏற்று அவரைத் தாங்குகிருள். இந்த நிலையிலிருந்து அபிராமி அன்னேயின் குழந்தையாகிய அபிராமிடட்.: பாடுகிருர், - so

அம்பிகை அனந்த கல்யாண குணங்கஜன் உடையவள்,

அந்தக் குணங்களெல்லாம் சேர்ந்த மல்போல இருக்கரு, அவள் என்றும் அழியாதவள். அந்தக் குணக்குன்டுன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/170&oldid=578109" இலிருந்து மீள்விக்கப்பட்டது