பக்கம்:திருக்கோலம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது ക്കുഖ8്? 168

ஸ்ர்வ பரித்யாகம் செய்து விட்டார். என்றைக்கு அன்னே யின் பெருமையை அறிந்துகொண்டு அவளுக்குப் பக்தராகி அவளுடைய கருணைக்குப் பாத்திரர் ஆகுரோ அன்றே அவர் எல்லாவற்றையும் அன்னையிடம் சமர்ப்பித்து விட்டார். ஓர் அணுவைக்கூட மிச்சம் வைக்காமல் எல்லா வற்றையும் அளித்து விட்டார். அதல்ை இதுவரையில் தம்முடையவை என்று உரிமையாகப் பற்றிக் கொண்டிருந்த வற்ருல் உண்டான நன்மை தீமைகள் அவருக்கு இல்லாமல் போயின.

எனக்கு உள்ள எல்லாம்

அன்றே உனது என்று

அளித்துவிட்டேன்.

இப்போது அவருக்கு ஏது கவலை? எல்லாம் அவள் பொறுப்பாகிவிட்டன. ஆத்ம சமர்ப்பணம் பண் ணி ன அவருக்குச் சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்த அநுபவம் உண்டாயிற்று. எல்லாம் மறந்து தாய் மடியில் உறங்கும் குழந்தைபோல் ஆகிவிட்டார். பாட்டு முழுவதும் பார்ப்போம். • : - - - -

நன்றே வருகினும், தீதே

விளேகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே

பரம்;எனக்கு உள்ள எல்லாம். அன்றே உனதுஎன்று அளித்துவிட்

டேன்;அழியாதகுணக் குன்றே, அருட்கட லே,இம

வான்பெற்ற கோமளமே!

(என்றும் அழிவற்ற குணமலயே, கருணு சமுத்திரடிே, பருவதராசன் பெற்ற மெல்லியலே, நன்மையே வந்தாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/173&oldid=578112" இலிருந்து மீள்விக்கப்பட்டது