பக்கம்:திருக்கோலம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டின் பயன்

எல்லாவற்றையும் அன்னக்கே அர்ப்பணம் செய்து விட்டு, இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாத நிலே பெற்றதைச் சொன்ன அபிராமிபட்டரை, சுவாமி, உங்கள்ேப் போலச் சர்வ பரித் தியாகம் செய்ய எல்லோ ராலும் முடியுமா? அம்பிகை உங்களைப் போன்றவர்களுக்கு அருள் பாலிப்பதோடு நின்றுவிட்டால் மற்றவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? எல்லோருக்கும் தாயாக இருக்கும் எம்பெருமாட்டி மற்றவர்காேப் புறக்கணிக்கலாமா? அப்படி யானுல் அலளுக்குச் சர்வலோக ஜனனி என்ற திருநாமம் பொருந்தாதே!’ என்று கேட்கி ருேம். -

அபிராமியட்டர், அன்னையை எல்லோரும் தொழ லாம். அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி வழிபடலாம். அதற்கும் பயன் உண்டு’ என்கிருர். எங்களால் இயன்ற அளவுக்கு வழிபட்டால் பயன் உண்டு என்கிறீர்களே! "நாங்கள் சிற்றறிவும் சிறு செயலும் உடையவர்கள். நாங்கள் செய்யும் வழிபாடும் சிறியதாகத்தானே இருக்கும்? அப்படியாகுல் எங்களுக்கு மிகவும் சிறிய லாபந்தானே

உண்டாகும்?’ என்று மறுபடியும் கேட்கிருேம். -

ஒரு தாய்க்கு வெவ்வேறு பருவத்திலுள்ள குழந்தைகள் பலர் இருக்கிறர்கள். பிராயத்தாலும் அறிவிலுைம் வேறு. பட்டவர்கள் அவர்கள். அவர்கள் தம் தாயினிடம் அன்பு செய்கிறர்கள். வயசுவந்த பிள்ளே புடைவை வாங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/175&oldid=578114" இலிருந்து மீள்விக்கப்பட்டது