பக்கம்:திருக்கோலம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருக்கோலம்

தருகிறன். சின்னப் பிள்ளே ஏதாவது பாத்திரம் வாங்கித் தருகிறன். சின்னக் குழந்தை தனக்கு யாரோ கொடுத்த பழத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி பிள்ளைகள் பண்டங்களைத் தருகிருர்கள். தாய் அந்தப் பண்டங்களின் உயர்வு தாழ்வைப் பார்க்க மாட்டாள். அவர்களுடைய அன்பையே பார்ப்பாள். அவர்களே ஆசீர்வதிப்பாள். அவ்வண்ணமே பூரீ மாதா வாகிய அபிராமியம்மை தம்முடைய சக்திக்கு ஏற்றபடி உபாசிப்பவர்களுக்கு, தம்மால் இயன்றதை மறைக்காமல் செய்து வழிபடுகிறவர்களுக்கு, நன்மையைத் தருவாள். இவ்வாறு அபிராமிபட்டர் விடை பகருகிருர். அந்த

بسام

விடையின் கருத்தே ஒரு பாடலாக வடிவெடுத்திருக்கிறது. அம்பிகை தன்ன வழிபடுகிறவர்களுக்கு அருள்புரிவாள் என்று சொல்ல வந்த ஆசிரியர், அக்பிகையை நினேக்கும் போது அந்தப் பெருமாட்டியினுடைய திருக்கோலம் அவர் கண்முன் வந்து நிற்கிறது. அம்மையைப் பலவாருகச் சொல்லிவிட்டு, அப்புறந்தான் அவளேத் தொழுபவர் பெறும் பயனச் சொல்லுகிருர். அன்னையிடம் அவருக்கு இருக்கும் உள்ள நெகிழ்ச்சி, அவன் ஓரிரண்டு வார்த்தை களாலே சுட்டிச் சொல்லிவிட்டுப் போக இடம் கொடுப்ப தில்லை. அவளைப் பற்றிச் சோல்லத் தொடங்கில்ை சொற்கள் உணர்ச்சி மிகுதியில்ை ஊற்றுப் போலச் சுரந்து வருகின்றன. எப்படி அம்பிகையைச் சொல்கிருர், பாருங்கள். 3. .

அம்பிகை மிகவும் மென்மையானவள்; தன்ன விரும்பிச் சிறிதளவு வழிபட்டாலுங்கூட அவள் அதை மதித்து நலம் செய்பவள். வைரத்தை நிறுக்கும் தராசு ஒரு துரும்பைக்கூட எடைபோடும் அல்லவா? அவள் அன்பர் களுக்கு வளைந்து கொடுக்கும் கொடியைப் போன்றவள்; மென்மையும் கொடி போன்று ஒசியும் மேனியும் வாய்ந் தவள். ஆகவே, z is . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/176&oldid=578115" இலிருந்து மீள்விக்கப்பட்டது