பக்கம்:திருக்கோலம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டின் பயன் - 169,

இவ்வாறு உள்ள அம்பிகையை மூன்று கரணங்களாலும் தொழ வேண்டும். அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி வஞ், சகம் இன்றித் தொழ வேண்டும். அரசராக இருந்தால் விரி வாக ஆராதனை நடத்தலாம். செல்வர்களானல் தம் செல் வத்துக்கு ஏற்ற வகையில் வழிபாடு இயற்றலாம். ஏழை கூடத் தன்னல் இயன்ற ஒரு பச்சிலேயைப் போட்டு வணங்கலாம். அவரவர்கள் தம்மால் இயன்ற அளவுக்கு வழிபடவேண்டும். இயல்வது கரவேல்’ என்று ஒளவைப் பாட்டி சொன்னுள். அது எல்லாச் செயலுக்கும் ஒக்கும். தம்மால் ஆகும் முழு அளவுக்கு அம்பிகையினிடம் ஈடுபட்டு வழிபட வேண்டும். அப்போது கிடைக்கும் பயன் என்ன? - -

நாம் செய்யும் வழிபாடு நம் சக்திக்கு ஏற்ப அமைவது" நம் சக்தியோ சிறியது. ஆலுைம் அம்பிகை அதைப் பெரிதாக ஏற்றுக்கொண்டு மிகப் பெரிய பயனேத் தருவாள். அரச பதவியைத்தான் உலகத்தில் சிறந்த பதவியாக அந்தக் காலத்தில் நினைத்தார்கள். அந்த அரச பதவியையே அம்பிகை அருள்வாள். ஒரு நாட்டுக்கு அரசராக இருக்கும் பதவியும் அன்று; ஒருலகத்துக்குத் தலைவராக இருக்கும் பதவியும் அன்று. எழுலகங்களுக்கும் அதிபராக இருக்கும் பெரிய பதவி சித்திக்கும். அம்பிகைக்கு, லாம்ராஜ்ய தாயினி என்ற திருநாமம் ஒன்று உண்டு; ஏழுலக ஸாம்ராஜ்

யத்தையே அவள் தந்துவிடுவாளாம்.

. தம்மால்

ஆம் ஆளவும் தொழுவார்

எழு பாருக்கும் ஆதிபரே.

யார் யாரையோ தொழுது என்ன பயன்? சர்வலோக சக்கரவர்த்தியாக ஆக்கும் போருளைச் செய்யும் மகாராஜ்குநி: அன்ன. அவள் நாம் செய்யும் வழிபாட்டின் அளவை அளந்து பயன் தருவதில்லை. நம்முடைய அந்தரங்க சுத்தியை, வஞ்சகமின்றி வழிபடும் பக்தியை, நம்மால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/179&oldid=578118" இலிருந்து மீள்விக்கப்பட்டது