பக்கம்:திருக்கோலம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்தது எங்கே?

காதல் வாழ்க்கையில் களவு என்றும் கற்பு என்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. அடுப்பாரும் கொடுப்பாரும் இல்லாமல், இறைவன் திருவருளே துணையாக நின்று கூட்டு விக்க, பண்பும் எழிலும் பொருந்திய ஒருவனும் ஒருத்தியும் தாமே சந்தித்து ஒன்றுபட்டுக் காதல் செய்யும் நிகழ்ச்சியைக் களவுக்காதல் என்பார்கள். இவ்வாறு ஒன்றுபட்ட காத லர்கள் பின்பு திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்து வார்கள், இதைக் கற்பொழுக்கம் என்று சொல்வார்கள்.

அகப்பொருள் நூ ல் க ளி ல் களவொழுக்கம் கற் பொழுக்கம் என்ற இரண்டையும் மிக விரிவாகச் சொல்லி யிருக்கிறர்கள், சங்க நூல்களில் பெரும்பாலானவை இந்த இருவகை ஒழுக்கங்களையும் சொல்வனவே. மதுரையில் எழுந்தளியிருக்கும் இறைவனே இந்தக் காதலைப் பற்றிய இலக்கண நூல் ஒன்றை அருளியிருக்கிருன். அறுபது சூத்திரங்கள் அடங்கியஅதற்கு, இறையனர் அகப்பொருள் என்று பெயர்; பெரும்பாலும் களவுக் காதலைப்பற்றிய செய்திகள் மிகுதியாக இருப்பதல்ை அதற்குக் களவியல் என்றும் ஒரு பெயர் உண்டு. சைவ சமயாசாரியர்களில் ஒருவராகிய மாணிக்கவர்சக சுவாமிகள் இந்தக் காதற். கதையைச் சொல்லும் ஒரு நூலைத் திருவாய் மலர்ந் தருளியிருக்கிருள். அதற்குத் திருச்சிற்றம்பலக் கோவை

திய 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/187&oldid=578126" இலிருந்து மீள்விக்கப்பட்டது