பக்கம்:திருக்கோலம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருக்கோலம்

வனப்புடன் விளங்கிள்ை. மயில் அழகான பறவை. பச்சை நிறமும், மென்ம்ையும், அழகிய நடையும் உடையது. பார்வதியாக அவதாரம் செய்தபோது அம்பிகை பச்சை நிறமுடையவனாக இருந்தாள். அவள் மெல்லியல்; மெத்தென்ற நடையை உடையவள். மலேயின்மேல் மயில் வளர்வது இயல்பு. இத்தனை வகைகளாலும் அம்பிகை மயிலேப்போல இருக்கிருள், அவள் இமயத்து, மயில்,

கோல இயல் மயிலாய் இருக்கும், இமயாசலத்திடை.

திரிபுரசுந்தரியாக, இராஜராஜேசுவரியாக, நீபுரத்தில் எழுந்தருளிய பெருமாட்டியே இமாசலராஜன் புதல்வியாக, பார்வதியாக, திருவவதாரம் செய்தாள். நீபுரத்தில் இருந்ததைவிடப் பார்வதியாக வந்தபோது சற்றே சமீபத் தில் வந்து விட்டாள். தன் கருணையினுல் மிக உயரத்தி லிருந்து பூவுலகத்தில் உயர்ந்த இடத்துக்கு வந்தாள். இது அவளுடைய கருணையைக் காட்டுகிறது.

இதோடு நிற்கவில்லே அன்இன. பின்னும் இறங்கி வருகிருள்; யாவரும் காணும்படி இறங்கி வருகிருள். வானத்திலே தோன்றும் செங்கதிரவனக ஒளி விடுகிருள். ஒளி தருகின்ற சுடர்கள் யாவுமே அவளுடைய திருவுருவங் களே. பானுமண்டல மத்யஸ்த்தா என்பது லலிதாம்பிகை யின் திருநாமங்களுள் ஒன்று. சூரியமண்டலத்தின் நடுவே நின்று சுடர்கின்றவள் அவள் குழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே? (47) என்று இவ்வாசிரியரே பாடி .யிருக்கிருர், அம்பிக்ைக்கு அஷ்டமூர்த்தி (662) என்பது ஒரு திருநாமம். பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், உயிர் என்னும் எட்டும் அவள் வடிவங்கள். ஆகவே சூரியனும் அவள் வடிவந்தான், உதயகுரியனில் அவளுடைய திருமேனிச் சோதியையே காணலாம். உதிக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/198&oldid=578137" இலிருந்து மீள்விக்கப்பட்டது