பக்கம்:திருக்கோலம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருக்கோலம்

பெயர்களே அமைப்பார்கள். அவை யாவும் காரணப் பெயர்கள்; பொருள் உள் ள திருநாமங்கள். இவ்வாறு பல வகையில் அன்னேயின் திருநாமங்கள் விரிந்து கொண்டே போவதால் அவற்றிற்கு எல்லே கோலி வரையறுக்க முடியாது.

எம்பெருமாட்டியிடம் அன்பு செய்பவர்கள் அவ ளுடைய திருநாமங்கள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று எண்ணமாட்டார்கள்; அது முடியாத காரியம். ஆலுைம் தம்மால் முடியும் வரையில் அதிக அளவுக்கு அந்தத் திருநாமங்களேச் சொல்லித் துதிப் பார்கன் ஆற்றுக்குப் போகும் பெண் ஆற்றில் உள்ள நீரை யெல்லாம் கொண்டுவர முடியாது, ஆனல் தான் கொண்டு போகும் குடத்தை முழுமையாக நிரப்பிக் கொண்டு வரலாம். அவ்வண்ணமே அம்பிகையின் திருநாமங்களேயும் புகழையும் நாம் முழுதும் தெரிந்து சொல்லி விட்டோம் என்று யாராலும் சொல்ல முடியாது, என்ருலும், நம் வாழ்நாள் முழுவதும் பல திருநாமங்களேச் சொல்லி மன நிறைவு பெறலாம். மனம் அமைதி பெறுவதுதான் முக்கியமானது. அப்போதுதான் இன்பம் உண்டாகும்.

அபிராமிபட்டர் ஒரு பாட்டு முழுவதும் அன்னேயின் திருநாமங்களாக அடுக்கிச் சொல்கிருர்; பத்துத் திருநாமங் களை எடுத்துக் கூறுகிருர். அவற்றைப் பார்க்கலாம்

அம்பிகைக்குப் பயிரவி என்பது ஒரு திருநாமம். லலிதா சக்சிரநாமத்தில் 276-ஆவது திருநாமமாக வருகிறது. அது. பைரவராகிய சிவபெருமானுடைய மனேவி என்பது அதற்குப் பொருள். பகைவர்களுக்கு அச்சம் தருபவள் என்பதும் ஒரு பொருள். 'தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொக்க நடிக்கக் கழு. தொடு கழுதாட' என்று அருணகிரிநாதர் போர்க்களத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/20&oldid=577959" இலிருந்து மீள்விக்கப்பட்டது