பக்கம்:திருக்கோலம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 18.

பெருமாட்டி தேவி, அந்த நிலையில் அம்பிகைக்குக் காளி, என்னும் திருநாமம் வழங்கும்; கரிய நிறம் உடையவள் என்பது சொற்பொருள். - . . . .

அன்னை எல்லாக் கலைகளுக்கும் தலைவி. அவை அவ&ாச் சார்ந்து விளக்கம் பெறுகின்றன. கலைகளையே மாலையாகத் தரித்திருத்தலின் கலாமாலா என்ற திருநாமம் அம்பிகைக்கு. வந்தது. எல்லாக் கலைகளையும் அன்னே இடையில் மேகலையாக அணிந்திருக்கிருளாம். பரஞ்சோதி முனிவர் திருவிளே யாடற் புராணத்தில், மெய்ம்மறையார் தலையஇனத்தும் மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா? (4:34) என்று பாடுகிருர். இதை வேறு வகையில் இவ்வாசிரியர் சொல் கிருர், விளங்குகின்ற கல்களாகிய வயிரங்களாலான சிறப்புள்ள வட்டமான மேகலேயை அணிந்தவள்’ எனனும் பொருள்பட, - .

ஒளிரும் கலா வயிர விமண்டலி

என்ருர். ஒளிரும் என்பது, அம்பிகையைச் சார்ந்ததல்ை அவை விளக்கம் பெறுகின்றன என்பதைக் குறிக்கும். மண்டலம்-வட்டம். - k

மாலினி.என்பது ஒரு திருநாமம். அதையும் சொல்கிருர். மலர்மாலயை அணிந்தவள் என்பது ஒரு பொருள். மாத்ருகா மாலயாகிய எழுத்து வரிசையின் தோற்றத்துக் குக் காரணமானவள் என்பது மற்ருெரு பொருள். அம் பிகையே எழுத்தாகவும், சொல்லாகவும் விளங்குகிருள். அகஷர மா8யைத் தரித்திருப்பவள்; அக்ஷமாலாதிதரா?? (489) என்பது அவள் திருநாமங்களில் ஒன்று.

அம்பிகை ஒரு கோலத்தில் சூலம், பாசம், கபாலம், அங்குசம் என்னும் நான்கு ஆயுதங்கக் யும் ஏந்தியிருக்கிருள். குலாத்யாயுத ஸம்பந்நா? (306) என்பது ஒரு திருநாமம், அந்த நான்கிலும் குலம் முக்கியமானது. அதல்ை அம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/23&oldid=577962" இலிருந்து மீள்விக்கப்பட்டது