பக்கம்:திருக்கோலம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருக்கோலம்

விழியின் கொழுங்கடையும்.

அம்பிகையின் கடைக்கண் அருளுக்காக ஏங்குகிற வர்கள் பக்தர்கள். ஆகவே அவர்களுடையநோக்கம் அந்தக் கடைக்கண்ணிலே இருக்கும்.

அடுத்தபடி, அம்பிகையின் திருவுள்ளம் உவப்புற்றதைக் குறிப்பது, அவளுடைய புன்முறுவல். பெண்களின் உள்ளக் குறிப்பைக் காட்டுவது அவர்களின் முறுவல். காதலன் தன் காதலியின் முறுவலிலிருந்து அவள் உள்ளத்திலுள்ள காதற் குறிப்பை உணர்ந்து மகிழ்வான். அகப்பொருட் பாடல்களில் இந்தச் செய்தியைச் சொல்லும் துறைக்கு, எமுறுவற் குறிப்பு உணர்தல்’ என்று பெயர். காதலாலுைம் வாத்ஸல்யம் ஆலுைம் உள்ளக் குறிப்பைப் புன்முறுவல் காட்டும். -

அபிராமி பட்டர் அம்பிகையின் திருவுள்ளத்தில் பொங்கும் வாத்ஸல்யத்தை உணரத் துடிக்கிருர். அவளுடைய திருவாயைப் பார்க்கிருர், அவளுடைய அதரங்கள் சற்றே திறந்து புன்னகையை வெளிப்படுத்து கின்றன. .

. முதலில் இதழ் கண்ணிலே படுகிறது. அது பவளத் தைப் போலச் செக்கச் செவேலென்று ஒளி விடுகிறது. எநவவித்ரும பிம்பறுநீநயக்காரி தசனச்சதா (லலிதா. :-) என்பது அன்னேயின் திருநாமங்களில் ஒன்று. புதிய பவளம், கோவைக்கனி ஆகியவற்றின் ஒளியைத் தாழச் செய்கின்ற இதழ்கண் உடையவள்” என்பது அந்தத் திருநாமத்தின் பொருள். அதல்ை புதிய பவளத்தினும் சிறந்த செவ்வண்ணம் உடையது அன்னேயின் இதழ். என்பது புலகிைறது. -

இங்கே அந்த இதழைப் பவளம் போன்ற இதழ் என்று சொல்லவில்லை; பவளம் என்றே சொல்லிவிடுகிறர். அதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/30&oldid=577969" இலிருந்து மீள்விக்கப்பட்டது