பக்கம்:திருக்கோலம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

என்னுடைய ஆசிரியப் பெருமானகிய மகாமகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தக்கயாகப்பரணியைப் பதிப்பிக்கும்போது, அந்த நூலின் உரையில் அம்பிகை சம்பந்தமான பல செய்திகள் வருவதை அறிய முடிந்தது. அவர்களுடன் இருந்து அந்த நூலே ஆராயும்போது தேவி பரமான செய்நிகளுக்கு விளக்கம் தேடிப் பல நூல்களேப் படிக்க நேர்ந்தது. லலிதா சகசிரநாம பாஷ்யம், செளந்தரிய லஹரி பாஷ்யம் ஆகியவற்றை ஒருவாறு பார்த்தேன். அப்பால் திருப்பனந்தாள் காசி மடாலயத்தின் தலைவராக எழுந்தருளியிருந்த நீ ல நீ காசிவாசி அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும்படி பணித்தார்கள். அப்போது பின்னும் அம்பிகை சம்பந்தமான வரலாறுகளேயும் விருத்துக் களேயும் நூல்களின் ாையிலாகவும் பெரியோர்களின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டா யிற்று.

பூரீமத் சிருங்ககிரி சாரதாபீடத்து ஜகத்குரு சங்கரா சார்ய சுவாமிகளின் அருளாசியுடன் ரீசங்கர கிருபா என்ற தமிழ்ப்பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. அதில் சில கட்டுரைகளே முதலில் எழுதினேன். அப்போது அதன் ஆசிசியராக இருந்த அமரர் கே. ஆர். வேங்கடராமைய ரவர்கள் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டு மென்று விரும்பினர்கள். அவர்கள் விருப்பத்திற்கிணங்கி அப் பத்திரிகையில் அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத்தைதக் கட்டுரை வடிவில் எழுதி வந்தேன். அவற்றைப் படித்த அன்பர்கள் பாராட்டினர்கள். பல பூரீவித்யா உபாசகர்களுடைய பழக்கம் எனக்குக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/5&oldid=577944" இலிருந்து மீள்விக்கப்பட்டது