பக்கம்:திருக்கோலம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருக்கோலம்

அம்பிகையின் ஏவல்களைச் செய்யும் பரிவாரங் களாக எல்லாச் சக்திகளும் இருக்கின்றன. பிரமன், திருமால், இந்திரன் முதலியவர்கள் அப்பெருமாட்டியைச் சூழ்ந்து துதிக்கிருர்கள். பிப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா (89) என்று லலிதா சகசிர நாமம் சொல்கிறது. ஹேரிப்ரஹ்மேந்த்ர லேவிதா? (291) என்பது மற்ருெரு திருநாமம், சிவபெருமானே அன்இனயை ஆராதிக்கிருகும்; சிேவாராத்யா (406), மேஹாபைரவ பூஜிதா (231) என்னும் திருநாமங் களால் இதனை அறியலாம். கமலாகூடிராகிய திருமால் தனியே வந்து சேவித்துத் தம் விருப்பத்தை நிறை வேற்றிக்கொள்கிருர், கமலாக: நிஷேவிதா (555) என்ற திருநாமத்தால் இது தெளிவாகும். கோடி திருமகளிர் அவள் திருத்தொண்டைச் செய்கி ருர் களாம்; எகடாகூடி கிங்கரீயூத கமலாகோடி லேவிதா? (590) என்பதல்ை இதனை அறியலாம். திருமகளும் கஜலமகளும் அ ன் னே க் கு ச் சாமரம் வீசுகின்றனர்; எஸ்சாமர ரமாவாணி ஸவ்யதrண லேவிதா (6.14) என்னும் திருப்பெயர் அதைத்தானே சொல்கிறது? அறுபத்து நான்கு கோடி யோகினிகள் அவளைப் பணிந்து நிற்கின்றனர். பண்டாசுரனைச் சங்கரித்தபோது உடன் இருந்த சக்திகளின் பெரும்படை அவளைச் சூழ்ந்து நிற்கிறது. அம்ருதாதி மகாசக்திகள் அவளேச் சுற்றி உள்ளனர். கால ராத்ரி முதலிய சக்திகளும், டாமரி முதலியவர்களும், ரம்பை முதலிய தேவ மகளிரும் பிறரும் அவளே வந்தித்துத் துதிக்கிறர்கள். உலகத்தை ஆக்கி அளித்துத் துடைக்கும் சக்திகளும், வெவ்வேறு நலன்களே உண்டாக்கும் அணங்குகளும், ஒவ்வொரு பொருளின் அதிதேவதையாக இருப்பவர் க்ளும் அன்னைக்குத் தொண்டு செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; தம்மைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் சில சில நலன்களையும் உண்டாக்குகிறவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/56&oldid=577995" இலிருந்து மீள்விக்கப்பட்டது