பக்கம்:திருக்கோலம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 47

இவ்வளவு பேர்களுக்கும் தனித்தலேவியாகிய அம்பி கையை வணங்கி, வாழ்த்தி அருள் பெற்ருல் தனித்தனியே ஒவ்வொருவர் தரும் நலன்கள் எல்லாவற்றையும் அன்னேயே வழங்குவாள். கங்கையை அடைந்த பிறகு கிணற்றையும் கால்வாய்களையும் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லே, எல்லாத் தெய்வசக்திகளையும் தன் பரிவாரமாகப் பெற்ற அம்பிகையின் அருள் பெற்ற பிறகு வேறு யாரை அணுகி வணங்க வேண்டும்? -

இதை அபிராமிபட்டர் சொல்கிருர், தேவி, எல்லா வகையான அணங்குகளும் நின் பரிவாரங்கள்; ஆகையில்ை நான் உன்னே வணங்குவதையன்றி வேறு யாரையும் வணங்க மாட்டேன்; உன்னே வாழ்த்துவதையன்றிப் பிறர் யாரையும் வாழ்த்தமாட்டேன்’ என்கிருர்,

அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள்

ஆகையில்ை . வணங்கேன் ஒருவரை; வாழ்த்துகிலேன்.

இன்னது செய்யமாட்டேன் ' என்று இரண்டைச் சொன்னவர் பின்னும் ஒன்றைச் சொல்கிரு.ர்.

நல்ல எண்ணம் உடையவராக இருந்தாலும் பொல் லாதவர்களோடு சேர்ந்தால் அவர்களுடைய சார்யில்ை நல்ல பண்புகள் மாறி அவர்களுடைய கொல்லாத குணங் கள் வந்து அடையும். மனிதன் கூடும் கூட்டத்திற்கு ஏற்ப மாறும் இயல்புள்ளவன். இது நல்லது என்று தெரிந்து ஒன்றைச் செய்ய முற்பட்டவர்கள், தம்முடைய அறி வாற்றலால் அதைக் கடைப்பிடித்து நிற்கலாம்; ஆல்ை மாறு பட் ட கொள்கையுடையவர்களோடு சேர்ந்தால் கடைப்பிடி நழுவிலுைம் நழுவும். விளக்கில் நல்ல திரியைப் போட்டு எண்ணெயும் நிறைய விட்டு ஏற்றி வைத்தால் போதாது; காற்று வீசும் இடத்தில் அதை வைத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/57&oldid=577996" இலிருந்து மீள்விக்கப்பட்டது