பக்கம்:திருக்கோலம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருக்கோலம்

அந்தக் காற்று அதை அணைத்துவிடும். ஆகவே, காற்றில்ை அணையாதபடி அதைப் பாதுகாக்க வேண்டும். இல்லே யால்ை திரி, எண்ணெய் இவை இருந்தும் விளக்கு எரிய இயலாது.

இறைவியின் பெருமையை அறிந்து அவளுடைய திருவடியையே புகலாகக் கருதி உபாசனை செய்யப் புகு கிருேம். அந்த உபாசனை உறுதி பெற வேண்டுமானல் அந்த இயல்பு உள்ளவரோடு பழகவேண்டும். உலகியலிலே ஈடு பட்டவர்கள் நம்மிடம் குலாவ வருவார்கள்; நமக்கு நன்மை செய்பவர்களைப் போலப் பேசுவார்கள். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அவர்களோடு சேரக்கூடாது. சேர்ந்தால் நம் கடைப்பிடி நழுவிவிடும். இதனை அறிந்த ஆசிரியர், நெஞ்சில் வஞ்சக எண்ணம் உடையவர்களோடு நான் இணங்க மாட்டேன்’ என்கிருர்.

நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்.

நல்லதை ஈட்டுவது வேண்டுவதுதான்; ஆனால் தீயது. வராமல் பாதுகாப்பது அதைவிட இன்றியமையாதது. உடம்பில் வளம் இல்லாமல் இருக்கலாம். ஆனல் நோய் வரக்கூடாது. பொல்லாதவர்களுடைய தொடர்பு பிணி யைப் போன்றது. அதனல், தம் கொள்கைக்கு மாறுபட்ட வர் களைக் கண்டால் அஞ்சி நடுங்கி ஒதுங்கி விடுவார்கள் நல்லவர்கள். அதல்ைதான் இவ்வாசிரியர், -

வெருவிப் பிறிந்தேன்.நரகுக்கு உறவாய

மனிதரையே?? (3)

கயவர் தம்மோ டென்ன கூட்டினியே: (79)

இறைவியின் அடியாரோடு இணங்கியிருப்பதல்ை நம்மிடம் உள்ள பக்தி முறுகும். அவர்கள் சங்கத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/58&oldid=577997" இலிருந்து மீள்விக்கப்பட்டது