பக்கம்:திருக்கோலம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் கழன்ற இன்பம்

அம்பிகையின் திருவுருவத்தைத் தரிசித்து மகிழும்

அடியவர்கள் அன்னேயை உண்முகத்தே தியானித்து இன்புறுவார்கள். அம்பிகையின் திருவுருவத்தை உள்ளே நிறுத்துதல் அவ்வளவு எளிய காரியம் அன்று. நாம் கண்ணில் காணும் திருவுருவத்தைப் பார்த்துப் பார்த்து அந்த வடிவத்தை உள்ளே நிறுத்திக் கொள்ள வேண்டும், படம் பிடிப்பதைப் போலப் புறத்தே பார்ப்பதை உள்ளத்தில் மெல்ல மெல்ல வைத்துப் பழக வேண்டும். ேேஉயிராவணம் இருந்து உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உருவெழுதி’ என்று திருநாவுக்கரசர் கூறுவார்.

ஒரு பொருகாக் கண்முன்னல் பார்க்கிருேம், கண்ணே மூடி அதை அப்படியே மனத்துக்குள் பார்க்க வேண்டு மால்ை பல காலம் அப்பியாசம் பண்ண வேண்டும். ஜாக்கிராவஸ்தையில் மனம் புறத்தே செல்லும் தன்மையை உடையது. கண்ணே மூடிக் கொண்டாலும் காது முதலிய இந்திரியங்கள் திறந்திருப்பதனால் அவற்றிலே படும் விஷயங் களில் மனம் தாவும். ஆகையால் மிகவும் பழக்கமான பொருளைக்கூடக் கண்ணே மூடிக்கொண்டால் தெளிவாகக் காண முடியாது.

கனவில் ஒரு பொருளேத் தெளிவாகக் காணுகிருேம், அப்போது நம்முடைய இந்திரியங்கள் வேலே செய்வதில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/64&oldid=578003" இலிருந்து மீள்விக்கப்பட்டது