பக்கம்:திருக்கோலம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருக்கோலம்

அட்ங்காமல் இருப்பதை மாற்ற வேண்டுமானல், நெடு நேரம் ஒர் ஒழுங்கான இடத்துக்குள் வளைய வரும்படி பழக்க வேண்டும். அம்பிகையின் திருக்கோயிலுக்குப் போவது, ஆவரணங்களே வலம் வருவது, சந்நிதிக்குள் புகுவது, அம்பிகைக்கு அபிஷேகம் செய்வது, பிறகு அலங்காரம் செய்வது, அருச்சனை செய்வது, தூப தீபங்கள் காட்டுவது, கர்ப்பூர ஆரத்தி காட்டுவது முதலியவற்றை மானசிகமாகச் செய்யப் பழகில்ை மனம் நெடுநேரம் அந்தச் சூழ்நிலையில் உலவிவரும். ஒரு குறிப்பிட்ட பொருளிலே ஈடுபடுவதற்குமுன் இவ்வாறு செய்தால் மெல்ல மெல்ல மனம் ஒருமுகப்படும். .

அம்பிகையின் முன் நின்று தீபாராதனே ஆகும்பேது, அவள் திருமேனியில் அந்த ஒளி வீசும்போது, மனம் உருக நின்று பழக வேண்டும். கோயிலேச் சுற்றிவந்து அபிஷேக ஆராதனைகளைக் கண்டபிறகு அம்பிகையின் திருமுன் நின்று அவள் திருவுருவத்தில் மனத்தைப் பதியச் செய்ய வேண்டும். மனம் அந்த நிலையில் ஈடுபட்டால் உடம்பிலே ஒரு கிளு கிளுப்பு ஏற்படும். . -

மனத்தில் அம்பிகையின் உருவம் பதிந்துவிட்டால் அவளுடைய திருமேனி சோதி வடிவமாகத் தோன்றும். விளக்கிலே பார்த்துப் பார்த்துப் பழகில்ை, கண்ணே மூடிய வுடன் இருட்டாகத் தோன்றும் நில மாறி அம்பிகையின் புன்முறுவலத் தரிசிக்கலாம்; அம்பிகையின் திருமேனித் தேஜசைக் காணலாம். அப்போது எங்கும் ஒரே ஒளியாக இருக்கும். ஒளி வெள்ளத்தில் மூழ்கும்போது வேறு எந்த உணர்ச்சியும் இராது. ஓரளவு நம்மை மறக்கும் நிலை உண்டாகும். - -

அப்போது உடப்பு மிக மிக இலேசாக இருக்கும். புறத் திலே உள்ள சீதோஷ்ணநிலை நம்மைப் பாதிக்காது. உடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/66&oldid=578005" இலிருந்து மீள்விக்கப்பட்டது