பக்கம்:திருக்கோலம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் சமன்ற இன்பம் 67.

புளகம் ப்ோர்க்கும். கண்ணில் ஆனந்தித்துளிக்ள் பெருகும். எங்கோகவலேயற்று இன்பமயமான வானத்தில் பறப்பது போன்ற அநுபவம் ஏற்படும். ஒரே ஒளி, ஒரே ஆனந்தம். அமுத அலைகளில் மிதக்கும் உணர்வு. அந்த நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பல காலம் தியானம் செய்து பழகினல் அந்த நில்ை உண்டாகும். அப்போது குண்டலினி சக்தி எழும்ப, முதுகந்தண்டிலே கிளுகிளுப்பும் குளிர்ச்சியும் பிறகு ஜில்லென்ற அநுபவமும் ஏற்படும்.

இந்த நிலை வளர்ந்தால், இந்த அநுபவம் முறுகினல், அந்தக்கரணங்கள் பூரித்து வெறும் வெளியாக மாறிவிடும். எதுவுமே தட்டுப்படாமல் எல்லாம் ஒளி வெள்ளமாக ఖిల్జఅ. அப்போது உண்டாகும் ஆனந்தத்துக்கு எல்லை ஏது

இந்த அநுபவத்தை அபிராமிபட்டர் சொல்கிருர்,

அம்பிகையைப் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவி யாகத் தியானம் செய்தார். சகசிரார கமலத்தில் வீற்றிருக் கும் ஆரணங்கு அவள். அப்போது இனிய நாதம் கேட்கும். வண்டுகளின் ரீங்காரம் போன்ற ஒலி கேட்கும், வண்டுகள் குழ்ந்து முரலும் ஆயிர இதழ்த் தாமரையில் அம்பிகை வீற்றிருக்கிருள் என்று சொல்லத் தோன்றும்.

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே! அளி-வண்டு.)

இவ்வாறு முதலில் தியானத்தைத் தொடங்கியவர் பிறகு அம்பிகையின் அகண்ட ஸ்வரூபத்தைத் தியானிக் கிறர். அவள் அகில அண்டங்களிலும் பரந்து விரிந்து நிற்பவள். ஒரே சோதி வெள்ளமாக நிரம்பி நிற்பவள். எஇறைவி ஒளி வெளி எங்குமே (தக்க, 166) என்று ஒட்டக்கூத்தர் பாடுகிறர். r - . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/67&oldid=578006" இலிருந்து மீள்விக்கப்பட்டது