பக்கம்:திருக்கோலம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருக்கோலம்

அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற

ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்.

முதலில் தாமரையில் எழுந்தருளும் தேவியாகக் காண லாம். பிறகு மெல்ல மெல்ல அந்த வடிவம் சோதியுருவாகத் தோன்றும். அந்தச் சோதியுருவம் விரிந்து பரந்து எங்கும் அதனேயன்றி வேறு ஒன்றும் தோன்ருதவண்ணம் படர்ந்து கப்பிக்கொள்ளும். அகிலாண்டமும் அவள் ஒளியாக நிற்கும் கோலத்தை உண்முகமாகவும் தரிசிக்கலாம். அண்டத்தில் உள்ளதைப் பிண்டத்திலும் காணலாம். எல்லேக்குள் அடங்கித் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் மனம் பதித்தால், வர வர அது சோதி வடிவாகப் படர்ந்து, எல்லே காண முடியாத சோதி வெள்ளமாகத் தோன்றும். - -

குளத்தை வெட்டுகையில் அதற்குக் கரை அமைக் கிருர்கள். குளத்தில் ஊற்று உண்டாகித் தண்ணிர் வரும். குளத்துக்குள் அடங்கி நிற்கும். சில இடங்களில் அந்த ஊற்று மிக வேகமாக எழுந்து வெள்ளமாகப் பரவிக் குளத் தின் கரையையும் மீறி எல்லாவற்றையும் உடைத்து மறைத்துக்கொண்டு பரவும். குளத்தில் தேங்கியிருந்த நீராக இராமல் எல்லாவற்றையும் கடந்து பெருகிய வெள்ள மாகக் காட்சி அளிக்கும். குளமே தோன்ருதபோது ஊற்றுக்கண் தோன்றுமா? -

இத்தகைய அநுபவம் அம்பிகையின் தியான யோகத் தில் சித்திக்கும். அம்பிகையின் அகண்ட ஸ்வரூபமாகிய ஒளிவெள்ளம் உள்ளே படரும்போது ஆனந்த உணர்வு ஏற்படும். அந்தக்கரணங்கள் அந்த வெள்ளத்தைத் தாங்கு வதற்குப் பெரியனவாகப் பூரிக்கும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை அந்தக்கரண பேதங்கள். நிறைய உண்டால் வயிறு பூரிப்பதுபோல இந்த ஒளி வெள்ளத்தைக் கண்டு உள்ளம் பூரிக்கும்; அந்தக்கரணங்கள் விம்மும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/68&oldid=578007" இலிருந்து மீள்விக்கப்பட்டது