பக்கம்:திருக்கோலம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{S2 திருக்கோலம் .

அளியார் கமலத்தில் ஆரணங் கே,அகி லாண்டமும்நின்

ஒளியாக நின்ற ஒளிர்திரு

மேனியை உள்ளுதொறும்

களியாகி, அந்தக் கரணங்கள்

விம்மிக் கரைபுரண்டு

வெளியாய் விடின் எங்ங் னேமறப் பேன்நின் விரகினையே!

(வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒளியாகப் பரவி நிற்கக் காரணமான பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத் தியானிக்குந்தோறும், என் அந்தக் கரணங்கள் இன்பம் உடையனவாகிப் பூரித்து, பிறகு காலதேச எல்லேகளெல் லாம் கடந்து திரிபுடியற்ற பரவெளியாகி விடுமானல், நீ அருள்செய்த இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு அடியேன் மறப்பேன்!

அளி-வண்டு. ஆரணங்கு-பொறிகளுக்கு அரிய தேவி, உள்ளுதொறும்-தியானிக்கும்பொழுதெல்லாம். வெளியாய் விடின்-எல்லே கடந்த பரவெளியாகிவிடுமானுல். இதையே பாழென்றும் சூன்யமென்றும் சொல்லர்; முப்பாழும் பாழாய் முடிவிலொரு குனியமாய்” என்பதும் இது. விரகுஉபாயம்.) -

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை’ (19) என்று முன்பும் சொல்லியிருக்கிருர். வெளியாதல்-அதீத நிலையை அடைதல். -

இத்தகைய அநுபவத்தைக் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பின் வருமாறு சொல்கிருர்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/72&oldid=578011" இலிருந்து மீள்விக்கப்பட்டது