பக்கம்:திருக்கோலம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் பதவி

. அம்பிகையின் திருவருளால் தமக்கு உண்டான ஆனந்த அநுபவத்தைச் சொன்னர் அபிராமியட்டர். கருவி கரணங்கள் கழன்ற நிலையில், எல்லாம் மறந்த நிலையில், பெறும் இன்பம் அது, அதை வழங்கும் அம்பிகை தன்னை .. வழிபடுகிறவர்களுக்கு இந்த உலகிலும் இன்பத்தைத்

தருவாள்; பரலோகத்திலும் நல்ல பதவியைத் தருவாள்.

உலகத்தில் பல வகையான பக்குவமுடைய மக்கள் இருக்கிருர்கள். எல்லோரும் ஒரே நிலையில் இருந்து. அம்பிகையை வழிபடுவதில்லே. அன்னேயிடம் குழந்தைகள் யாவரும் ஒரே மாதிரி பொருளே வேண்டுவதில்லை. சின்னஞ் சிறு குழந்தைகள் உணவுப்பொருளேயே கேட்கும்; பிறகு விளையாட்டுப் பண்டங்களேக் கேட்கும்; பிறகு ஆடை அணி களைக் கேட்கும். வயசு அதிகமாக ஆக அதிக நாள் நிலைக்கும் பொருள்களையும் நுட்பமான பொருள்களேயும் மைந்தர்கள் கேட்பார்கள். செல்வம் படைத்த அன்னே அவரவர்கள் விருப்பத்துக்கும் தகுதிக்கும் ஏற்றபடி உதவி புரிவாள்.

சிறு குழந்தைக்குப் பால் ஊட்டுவாள். சற்றே பெரிய குழந்தைக்குச் சோறு ஊட்டுவாள். வளர்ந்த குழந்தைக்குச் சாதம் பரிமாறுவாள். ஒரு மகனுக்கு ஆடை வழங்குவாள். தக்க வயதுள்ளவனுக்குக் கல்வி கற்பிக்க வகை செய்வாள். சிலருக்குப் பொருளைத் தருவாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/74&oldid=578013" இலிருந்து மீள்விக்கப்பட்டது