பக்கம்:திருக்கோலம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் பதவி 65.

பராம்பிகையாகிய அபிராமியும் தன்னுடைய பக்தர் களின் பக்குவத்துக்கு ஏற்றபடி அருள் பாலிப்பாள். இந்த உலகில் அறமும், பொருளும், இன்பமும் நிரம்பும்படி அருளு வாள். மறுமையில் இந்திர பதவி முதலியவற்றை வழங்கு வாள். எல்லாவற்றுக்கும் மேலாக முக்தியை அளிப்பாள். இம்மை, மறுமை, வீடு என்ற மூன்று வகையான இன்பங் களையும் வழங்குகிறவள் அவள்.

மறுமையில் தேவராக வாழ்தல் மிக்க இன்பம் தருவது. புண்ணியம் மிகுதியாகச் செய்தவர்கள் தேவராக இருந்து இன்புறுவார்கள். நூறு யாகம் செய்தவர் தேவர்களுக்குத் தலைவனகிய இந்திரனுடைய பதவியைப் பெற்று வாழ்வர். நூறு யாகம் செய்வது எளிய காரியம் அன்று. அம்பிகையின் அன்பர்கள் எளிதில் இந்திர பதவியைப் பெற்றுவிடலாம் , அம்பிகையை வழிபடுவதே பல வேள்விகள் செய்வதற்குச் சமானம். இதை அபிராமிபட்டர் சொல்ல வருகிறர்; *அபிராமி அன்னையைப் பூஜிப்பவர்கள் இந்திரகை வீற். றிருக்கும் பதவியைப் பெறுவார்கள்’ என்கிருர்.

பக்தி வகைகளில் அருச்சனை ஒன்று. தேவியை மலர் தூவி வழிபடுவது அது. அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த, அண்டத் தரும் பெறல் மேகன் என்று திருவாசகம் கூறும். அம்பிகைக்கு ஆயிர நாமங்கள் உள்ளன. அவற்றைச் சொல்லி அன்னையின் திருவடிகளில் அருச்சனை செய்வது மரபு.

இறைவியினுடைய திருவடியில் மலரை இடும்போது மூன்று கரணங்களும் ஈடுபட வேண்டும். கை மலரை இடும்; வாய் அவள் திருநாமத்தைச் சொல்லும்; மனம் அந்தத் திருவடியிலே ஈடுபடும். ஒரு பொருளை அடையாளம் வைத்துப் பார்ப்பதுபோல மலரால் திருவடியை அடை யாளமிட்டுக் கண்ணுல் கண்டும், கருத்தால் தியானித்

தி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/75&oldid=578014" இலிருந்து மீள்விக்கப்பட்டது