பக்கம்:திருக்கோலம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் உடையவர். பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’ (25) என்றும், உடைத்தன வஞ்சப் பிறவியை (27) என்றும், ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லே?? (31) என்றும் முன்பு கூறியதைப் பார்த்தோம். இனிமேல் எனக்குப் பிறவி இல்லை. உங்களுக்கும் பிறவி இல்லாமற் போகும் வழியைச் சொல்கிறேன்; அன்னேயை வழிபட்டுத் தரிசனம் செய் யுங்கள்’ என்று இப்போது யாவருக்கும் உபதேசம் செய்யப் புகுகிருர். அம்பிகையைப் புறத்தே தரிசித்து உண்முகத்தும் கண்டு அமைதி பெற்று இருங்கள். இனி அவள் உங்களைப் படைக்கமாட்டாள்" என்று வழி சொல்லித் தருகிரு.ர். அம்பிகையைத் தரிசனம் செய்கையில் அவள் திருவுருவம் நம் கண்ணில் படும் அல்லவா? அந்தத் திருவுருவத்தை நமக்குச் சொல்வில்ை கோலம் செய்து காட்டுகிருர்.

முதலில் அவளே நமக்கு உரிய கடவுள் என்று தொடங்குகிருர், எல்லாரையும் தன் உடைமையாக உடையவனதலின் இறைவனுக்கு ஸ்வாமி என்று பெயர். அதைத் தமிழில் உடையான் என்பார்கள். அம்பிகை எல்லாரையும் உடையவள்) ஆதலின் அவளே ஸ்வாமினி என்பர்; தமிழில் உடையாள் என்று கூறுவர்.

உடையாள் உன்றன் நடுவிருக்கும்??

என்பது திருவாசகம். -

நம்மையெல்லாம் உடையவள், நமக்கு உரியவற்றை யெல்லாம் தரும் தலைவி, நம் நன்மையையே விரும்பும் தாய் அபிராமி, ஆதலின், - .

உடையாள - - - என்று தொடங்குகிறர். அவளுடைய திருவுருவ வருணனே

யைத் தொடர்ந்து கூறுகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/84&oldid=578023" இலிருந்து மீள்விக்கப்பட்டது