பக்கம்:திருக்கோலம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு அறுப்பு:வள் 77

இவ்வளவும் சொல்லி, அன்னையின் அருளால் த்ாம் பெற்ற பேற்றைச் சொல்கிறர்: அதையும் அம்பிகை யின் இயல்பைச் சொல்பவரைப்போல வைத்துச் சொல் கிருர், - . . . * ,

இங்கு என்னே இனிப் படையாளே. ‘இனிமேல் இந்த உலகில் வந்து பிறக்கும்படியாக என்னேப் படைக்காதவளை’ என்று சொல்வதில் அவருடைய உறுதிப்பாடு தெரிகிறது.

இந்தப் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது; பிறருக்கும் இது கிடைக்கும். அம்பிகை தன்னே அண்டி வழிபடுகிற வர்கள் எல்லாரையும் பிறவிப் பிணியினின்றும் நீக்கும் பேரருள் உடையவள். ஆதலால் நீங்களும் அந்த நிலையை அடையலாம். அதற்கு வழி சொல்கிறேன். அவளைத் தரிசனம் செய்து அமைதியாகக் கவலையற்று இருங்கள் என்று தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் சொல்கிருர், -

உங்களையும் படையாவண்ணம் பார்த்து இருமே போர்த்து இரும்’ என்று உபதேசிக்கிறர். பார்ப்பது இருவகை. முகக்கண் கொண்டு பார்ப்பது புறப்பார்வை; அக்க்கண் கொண்டு பார்ப்பது அகப்பார்வை. முதலில் புறக்கண் கொண்டு அம்பிகையின் திருவுருவத்தைத் திசித்து, பின்பு அந்த வடிவை உள்ளத்துள்ளே நிறுத்திச் தியானம் செய்ய வேண்டும்; அந்த உண்முகப் பார்வை யில்ை ஆனந்தம் உண்டாகும். -

'முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்’

என்று திருமூலர் சொல்வார். அகத்திலே அம்பிகையின் திருவுருவத்தை நிறுத்தப் பல நாள் பயிற்சி வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/87&oldid=578026" இலிருந்து மீள்விக்கப்பட்டது