பக்கம்:திருக்கோலம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.2 . . திருக்கோலம்

அத்தகையது அந்த நிக்ல. முறுகின பக்தியில்ை உள்முகத்தே தெளிவாக அம்பிகையின் தரிசனத்தைக் கண்டவர்களுக்குப் புறத்திலும் அந்தத் தரிசனம் கிட்டும். இராமகிருஷ்ண பரமஹம்சர் அப்படி அன்னேயின் தரிசனத்தைப் பெற்றவர். அபிராமிபட்டரும் அத்தகைய நிலையில் இருந்தவரே. அவர் தம்முடைய அநுபவத்தைச் சொல்ல வருகிருர்,

போன பாட்டில், 'என்னை இனிப் படையாளே உங்கனை யும் படையாவண்ணம் பார்த்து இருமே” என்றர். அவர் அவ்வாறு பார்த்து இருந்தவர். எப்படிப் பார்த்தார் என்பதை இந்தப் பாட்டில் சொல்கிறர்.

முதலில் புறத்தே விக்கிரக வடிவத்தில் கண்டு, பிறகு உள்ளே நிறுத்தித் தியானம் செய்தால் அந்த விக்கிரகம் உயிர் பெற்று நிலவும், கண் பார்க்கும்; வாய் பேசும்; உடம்பு அசையும்; கால் நடக்கும்; ஆனந்தக் கூத்தாடும். இதற்கு அடுத்த நிலை, அவ்வாறு கண்ட கோலத்தைப் புறத்திலும் காணுதல். குழந்தையை இழந்த தாய் அந்தச் சோகத்தால் பைத்தியம் பிடித்து, எதைக் கண்டாலும் அதைத் தன் குழந்தையென்று கட்டிக்கொள்வாள். குழந்தைப் பாசத் தால் விளைந்த உன்மத்த நிலே அது. பக்தர்களும் ஞானிகளும் ஒரு வகையில் உன்மத்த நிலையில் உள்ளவர்களே.ஆகையால் அவர்களுக்கு உள்ளே கண்ட தெய்வத்தைப் புறத்திலும்

கானும் அநுபவம் ஏற்படும். அபிராமி பட்டர் சொல்வதைக் கேட்கலாம்.

பார்க்கும் திசைகளில் எல்லாம் அம்பிகையின் தரிசனம் கிடைக்கிறது. ஏதோ மங்கலான பிழம்பாக அன்று; மிகத் தெளிவாக அங்க அடையாளங்களுடன் அம்பிகையைத் தரிசிக்கிறர். இதோ அவள் திருக்கரத்தில் ஏந்திய பாசம் தெரிகிறது; அங்குசம் தெரிகிறது. மற்ற இரண்டு கைகளும் தோன்றுகின்றன; வண்டுகள் ஊதும் மலர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/92&oldid=578031" இலிருந்து மீள்விக்கப்பட்டது