பக்கம்:திருக்கோலம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஜயம்

ఒఖఉమే பிறந்தவர்கள் யாவராயினும் চত நாள் இறந்து போவார்கள். பிறப்பு: இறப்பு என்னும் இரண்டும் ஒரே தாளில் உள்ள இரண்டு பக்கங்களைப் போன்றவை.

மரணத் துன்பம் எல்லாத் துன்பங்களையும்விடக்க கொடுமையானது.

சோதலின் இன்னுத தில்லை??

என்று திருக்குறளில் வருகிறது. சிகப் பெரியவர்கள் கூட மரணத்தை எண்ணி அஞ்சுவார்கள்; மரணம் வரும்போது என்னைக் காப்பாற்றவேண்டும்’ என்று இறைவனிடம் முறை இடுவார்கள்.

எல்லோருக்கும் மரணம் வந்தாலும், ஞானிகள் பெறும் மரணத்துக்கும் மற்றவர்கள் பெறும் மரணத்துக்கும் வேறு பாடு உண்டு. ஞானிகளின் மரணம் விடுதலையைப் போன்றது. மற்றவர்களின் மரணம் சிறை மாற்றத்தைப் போன்றது. அதாவது, ஞானிகள் இந்த உடம்பை விட்டுப்i பிரிந்தால் மீண்டும் பிறவியை எடுக்கமாட்டார்கள்; பிறவிப் பெருங்கடலேக் கடந்து விடுவார்கள். மற்றவர்களோ, இந்த உடம்பை விட்டுப் பிரிந்தாலும் வேறு ஒரு சரீரத்தை எடுத்து மீண்டும் பிறப்பார்கள். அவர்களுடைய ஜீவ யாத்திரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதல்ை துன்பங்களும் தொடர்ந்து அநுபவிக்கவேண்டிவரும். ஞானிகளோ இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/96&oldid=578035" இலிருந்து மீள்விக்கப்பட்டது