பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை பொன் புரிசை, பொன்னம் பந்து, பொன் மாலே - இவை கூறப்பட்டுள. பொன்னர் மணி புலம்ப' எனும் இடத் தில் பொன் என்பதற்கு இரும்பு எனப் பொருள், கொள்ளப் பட்டுளஅ. பொன்னின் (பொருளின்) விசேடம் 1. பொன் : பொன்னே ஈட்டுதலில் நெஞ்சு ஒட்டம் தருகின்றது. (முனிவர்) அறந்தார் கருதுவதாகிய மறுமை யின்பமும் அரசர் கருதுவதாகிய இம்மையின்பமும் பொரு ளில் முற்றுப் பெறும். 2. மணி : அக்கின் மணி, அணிமணி, உடை மணி, கதிர் மாமணி, கவண்மணி, குருமா மணி, சிந்தாமணி, சூளாமணி, தோளாமணி, தேர்மணி, நீலமணி, பொன்னர் மணி, பெளவம் பணிமணி, மணி கண்டன், மணி முத்தம், மணிவேல், இவையும் பிறவும் கூறப்பட்டுள. பிறவற்றை ஒளி நெறியிற் காணலாம். 3. முத்து : ஆரம் கித்திலம், இவை முத்தைக் குறிக்கும். எழில் முத்தம், கடல் முத்து, கண்முத்த மாலே, கதிர் முத்தம், களிற்றின் மருப்பு உகு முத்தம், குளிர் முத்தம், சங்கம் தரும் முத்து, செங்கனி, வெண் முத்தம், தன் முத்தம், பொன் அவிழ் முத்தம், பெளவம் பணி மணி (முத்து), முத்தணி புன்னே, முத்தின் குவளே, வெண் வித்திலம், வேய் தந்த வெண் முத்தம் இவை கூறப்பட்டுள. பிற ஒளிநெறியிற் காணலாம். 4. பவளம் : மாதர்களின் வாய் பவளத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இவபிரான் சடை பொன், மணி, பவளம் இவைகள் போன்று பொலிந்து இலங்கும். 5. பளிங்கு ; இது அடுத்ததைக் காட்டும்.