பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை

க. சிவபிராற் பகுதி

1. சிவபிரான் அட்டவீரம் (1)

1. காமனை எரித்தது கரும்பு வில்லும், பூ அம்பும் உடைய காமன் நைந்து ஒடுங்கிப் பொடியாய் விழத் தன் கண் கொண்டு விழித்தனர் பெருமான்.

காமன் தன் மீது மலர் அம்பு எய்தபோது அதைப் போறாது நெற்றிக் கண்ணை விழித்தார் சிவபெருமான்.

அனங்கன், கருப்புச் சிலேயோன், காமர், காமன், பூங்கனைவேள், வேழப்படையோன் எனக் காமன் குறிக்கப்பட்டுள்ளான்.

2. காலனை அட்டது ஒருவராலும் மாற்றப்படேன் என்று வழிபடுவோனேது உயிரை வெளவ வந்த காலனை ஒலமிடும் வண்ணம் தில்லைக் கூத்தர் அடர்த்தார்.

எல்லாப் பொருளும் அழிய வெகுளுதல் வல்ல அக்காலனை வெகுண்டார் பெருமான், தன்னை அடைந்த அந்தணனை ஏதம் செய்யக் குறித்து அவ்விடத்துப் புகுந்த காலன் வலிகெட ஒரு கழலை வைத்த எழிலை உடையவர் தில்லைப் பெருமான்.

3. சலந்தரனைத் தடிந்தது அச்சத்தால் வரும் நடுக்கத்தை வெகுண்ட சலந்தரனுடைய ஆகத்தைக் காய்ந்தார் பெருமான்.