பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் உரைநடை

4. நயப்பு [4. அகல்கின்ற]
தெய்வம் அல்லள் என்று தெளிந்த பின்னர், மக்களுள்ளாள் என்று நயந்து இடையில்லைகொல் என்ற நெஞ்சிற்கு, அல்குலும் முலையுங் காட்டி இடையுண்டு என்று அவளை அடைய நினைந்து அவள் அழகை வியந்து நிற்கின்றான்.

5. உட்கோள் [5. அணியும்]
அம் மாதுக்குத் தன்னிடத்தில் காதல் உண்டு என்பதை அவளுடைய கண்ணிற் கண்டு அவள் உள்ளக்கருத்தை அறிகின்றான்.

6. தெய்வத்தை மகிழ்தல் [6. வளைபயில்]
அங்ஙனம் அவள் கருத்தை அறிந்த தலைவன் அவளைத் தனக்குத் தந்த தெய்வத்தை நினைந்து வியந்து, வேறு தெய்வத்தை யான் வியவேன் என மகிழ்ந்து கூறினன்.

7. புணர்ச்சி துணிதல் [7. ஏழுடையான்]
அங்ஙனம் தெய்வத்தை மகிழா நின்றவன் இஃது எனக்குத் 'தெய்வப் புணர்ச்சி' எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லி, இவளை ஆயத்தின் நின்று பிரித்த விதியே துணையாகத் தெய்வம் கூட்டி வைத்தது (கந்தருவ மணம் கை கூடிற்று) என எண்ணிப் புணரத் துணிகின்ருன்.

8. கலவி உரைத்தல் [8. சொற்பால்]
புணர்ந்த தலைவன் கலவி இன்பத்திற் களித்து இவள் அமுது, நான் அமுதின் சுவை எனக் கூறி மகிழ்கின்றான்.