பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பாங்கற் கூட்டம்

புணர்ந்து அகன்ற ஆண் யானையைக் காண ஒரு பெண் யானை தன் கண்ணைப் பரப்பி ஆண்யானையின் வரவை எதிர்பார்த்திருந்ததைக் கண்டேன் என்று (பிடிமிசை வைத்து) கூறினன்.)

17. செவ்வி செப்பல் (35. கயலுள)
அங்ஙணம் பிடிமிசை வைத்துக் கூறக்கேட்ட தலைவன் பாங்கன் சொன்ன விவரம் தனக்குப் போதாமையிற் பின்னும் ஆற்ருமை நீங்காணாயினன்; அது கண்ட பாங்கன் தலைவனை ஆற்ற வேண்டித் தலைவியின் கண் முதலிய அவயங்களின் அழகை (செவ்வியை) எடுத்து விளக்கமாகக் கூறினன். (எங்ஙனம் எனில் தாமரைப் பூவின் மேல் கயல் மீன்கள் கிடந்தன எனக் கண்களையும், பவளத்தின் அயலில் நிரையாக முத்துக்கள் உள என்று பற்களையும், தில்லையம்பலத்தின் வசீகர இயல்பைக் கொண்ட இணைச் செப்புகள் இருந்தன எனக் கொங்கைகளையும், இருள் செறிந்து கிடந்த புயல் (மேகம்) விளங்கிற்று எனக் கூந்தலையும் கொண்ட உருவம் தான் தலைவ! நீ கூறிய உருவம் என்றபடி)

18. அவ்விடத்து ஏகல் (36. எயிற்குலம்)
அங்ஙனம் தலைவியின் செவ்வியைச் செப்பக் கேட்ட தலைவன் 'குயில் போல் விளங்கி' தொண்டைக் கனியிடத்தே குளிர்ந்த முத்தங்களை நிரைத்து, "வேலைக் கமலத்திற் கிடத்தி, அன்னம்போல் நடக்கும் மயிலே நீ கண்டது, உண்டேல் அதுவே எனது நிலைபெறும் உயிராம்' என்று கூறித் தான் அவ்விடம் நோக்கிச் செல்கின்றான்.


1. இது வாயில் உள்ள பல் வரிசையைக் குறிக்கும்.
2. இது முகத்தில் உள்ள கண்ணைக் குறிக்கும்.