பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. காண நாட்டம் † do 4. பவன் குறிப்பு அறிதல் (64. அளிய) அங்ாவனம் கூறின தலைமகனுடைய முகத்தில் தலை பகா து செயல் புலப்படக் கண்டு, தலைமகனது குறிப்பு இவளி த், தெனத் தோழி அவனது நினைவைத் தாllந்து உணர்ந்தாள். 3. அவள் குறிப்பறிதல் (65. பிழை கொண்டு) தலைமகனது நினைவை இன்னதென அறிந்த தோழி இவனிடத்து இவள் நினைவே அன்றி, இவ வி த்து இவன் நினைவும் உண்டோ எனத் தலைமகளை நோக்க, அவள் முகத்திலும் அவன் செயல் புலப்படக் கண்டு இவள் குறிப்பும் இவனிடத்ததெனத் துணிந்து ணர்ந்தாள். (எங்ங்னம் எனில் மாந்தழையைக் கொண்டு ஒருவன்' என்று சொல்லுவதன் முன் உள்ளம் தழைத்து நின்ருள்; அதல்ை இவள் குறிப்பு இவன் கண்ணதே போலும்.) 4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல் (66. மெய்யே) இங்ங்னம் இருவர் நினைவும் கண்டு இன்புற்ற தோழி இவ்விருவரும் இவ்விடம் வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக் கண் இவள் கண்ணுகிய வண்டு இன்பத் தேனை உண்டு எழில் பெற வந்த தற்கே . அன்றிப் பிறி தில்லை. இவற்கு மெய்யாகவே வேட்டை யின் மேல் உள்ளமில்லை; இவளும் புனத்தினைக் காப்பது பொய்யேயாம்' என்று அவ் விருவருடைய நினைவைத் துணிந்து உணர்ந்தனள். குறிப்பு:-'எ. குறையுற உணர்தல்' என்னும் இவ் அதிகாரம் 1. குறையுற்று கிற்றல். முதலான 4 துறைகளைக் கொண்டு முடிகின்றது. அ1. நான நாட்டம் நாண நாட்டம் என்பது இருவர் நினைவும் ஐயம் அறத் துணிந்த தோழி அவர்களுடைய கூட்டம்