பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: இட அ திருக்கோவையார் உரைநடை அறிவு இல்லாத நான் சொன்ன சொற்களை உள்ளத்திற் கொள்ளத் தகாது; அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவது இதுவே' எனத் தோழி தலைமகளோடு புலந்து கூறினுள். i. 7. வின்மொழியாற் கூறல் (88. மேவியந்தோல்) அங்ங்னம் புலந்து கூறிய தோழி திருநீற்றை மெய் முழுதும் பூசி, கையிற் சித்திரம் விளங்கும் கிழியுடன், ஒன்றும் வாய் திறந்து பேசாமல், பனைமடல் ஏற அக் கொடியோன் துணிந்து உள்ளான்; அக் கிழியிலுள்ள சித்திரம் நின்னுடைய வடிவு என்னும் உரையும் உளது; இதற்குக் காரணமாகிய தீவினை யாதோ, இனி நீ உனக்கு உற்றது செய்வாயாக யான் அறியேன்” என்று வன்மொழியால் தலைவியிடம் கூறினள். 8. மனத்தொடு நேர்தல் (89. பொன்னர் சடை) இங்ங்னம் தோழியால் வன்மொழி கூறக் கேட்ட தலைமகள் 'எனக்கு வந்துள்ள நோய் என்னுல் அறியப் படுவதில்லை; ஆதலால், யான் மறுமாற்றம் சொல்லேன்; என்க்குத் துணை நிற்கின்ற மனமே! அயலார் வந்து சொன்னர்கள் என்ற இக் குற்றம் என் இடத்துச் சேராமல் குணம் நிறைந்த அந் நல்லவற்கு (தலை மகனுக்கு) நான் படும் துயரத்தை நீயே அறிவிப்பாயாக' எனத் தான் ஆற்ருளாய்த் தலைம4னைக் காணவேண்டித் தன் மனத்தொடு கூறினள். குறிப்பு :- க.க. குறை கயப்புக் கூறல்” என்னும் இவ் == அதிகாரம் 1 குறிப்பு அறிதல்’, முதலான 8 துறைகளைக் கொண்டு முடிகின்றது. கஉ. சேட்படை சேட்படை” என்பது தோழி தலைமகன் குறையைத் தீர்க்க உடம்படாமல் மறுத்தல் (துார விடல்). தலைமகளது