பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**_ ,P" திருக்கோவையார் உரைநடை 16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் [105. பண்டால்) வேறு காரணம் சொல்லி மறுத்து இப்பொழுது தலைவி இளையள் என்று இயையாமை கூறி மறுக்க வேண்டியது என்ன காரணம் ? இனி இவ் ஒழுக்கம் இவளை (தோழியை) விட்டு நான் வேறு வகையில் என் எண்ணத்தை முடிப்பேன் என உட்கொண்டு தலைவன் நிற்க, இனி நீ என்னை மறைப்பின் கருதியது முடியும் முறைமை (வழி) இல்லைபோலும் (காரியம் முடிக்கை அரிது) என்று கூறித் தோழி நகைத்து உரைத்தாள். 17. நகை கண்டு மகிழ்தல் (106. மத்தகஞ்) இவளை (தோழியை) ஒழிய ஒழுகக் கடவேன் என்று தலைமகன் தன் மனத்திற் குறித்த குறிப்பைத் தோழி அறிந்து நகைக்க, அவளது (தன்னை மறைத்தால் முடி யாது, மறையா விட்டால் முடியும் என்பதை) உள்ளக் கருத்தை நான் அறிந்து இவள் மறுத்தாளாயினும் நம் மாட்டு மலர்ந்த முகத்தினளாய் இருப்பதால் தோழியை நோக்கி 'உனது முகமாகிய மதியின்கண் உண்டாகிய மெல்லிய நோக்கந்தான் எனக்குச் சிறந்த துணை ஆகும் அதல்ை ஆற்றத் தகும்” என்று தலைவன் மகிழ்ச்சியுடன் கூறினன். 18. அறியாள் போன்று நினைவு கேட்டல் (107. விண் இறந்தார்) தலைமகனது மகிழ்ச்சியைக் கண்ட தோழி, இவன் வாடாமல் தழையை வாங்குவேன் என உட்கொண்டு 'எம் பெருமானது திருக்கழுக்குன்றத்துச் சந்தனச் சோலையில் பந்தாடுகின்ற எனது தோழியர் எண்ணிறந்த பேர் உண்டு, மன்னனே! அவருள் யார் கண்ணதோ? நினது அருள் கூறுவாயாக’ எனத் தலைவனைக் கேட்டனள்.